பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿憩 தொல்காய்யியம் சிறகு என்றது ஆகுபெயர் . பேராசிரியம் : - (இ-ள்) பறப்பனவற்றுள் ஆண்பாற்கெல்லாம் சேவற் பெயர் உரித்து, அவற்றுண் மயிற்காயின் அஃதாகாது (எறு.) 'காமர் சேவ லேமஞ் செப்ப' (அகம் : 103) எனவும், '167ಹಹ೭ சேவல் வாளாது மடியின்’ (அகம்: 122) எனவும், 'தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்’ (குறுத் 107 எனவும், கானங் கோழிக் கவர்குரற் சேவல்' ※ , , . % (குறுந் : 242. புறம் , 395 , மலைபடு: 510) § எனவும், 'உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்” (குறுந் : 85) எனவும் வரும், பிறவும் அன்ன. மாயிருந் துரவி மயில்” என்றத்னான் அவை தோகை யுடையவாகிப் பெண்பால் போலுஞ் சாயலவாகலான் ஆண் 1. சிறகு என்னும் சினைப்பெயர் சிறகினையுடைய பறவைக்கு ஆனமையால் ஆகுபெயர் என்றார். 2. சிறகொடு சிவனும் மாயிருந் தூவி மயில் என்றது தோகை பீனையுடைய ஆண்மயிலினை. இம்மயில் ஆண்பாற் பறவை யாயினும் தான் இயல்பாகப் பெற்றுள்ள நீலநிறத் தோகை யின் வனப்பால் பெண் போலும் சாயலினைப் பெற்றதாதலின் அத்தகைய மயிலுக்கு ஆண்பாலுக்குரிய சேவல் என்னும் பெயர் பொருந்தாது என்பது தொல்காப்பியனார் கருத் தாகும். எனவே இவ்வியலில் விரித்துரைக்கப்படும் இளமை, ஆண்மை, பெண்மை பற்றிய மரபுப் பெயர்கள் தாம் குறித்த பொருளின் பண்புடன் நெருங்கிய தொடர்புடையன என்பது நன்கு புலனாகும்,