பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் - நூற்பா உஅ கடு

எனவே, தலைவி, தான்வாழும் நிலத்துள்ளனவெல்லாம் அறியுமளவுக்குப்பயிற்சியில்லாதவள் எனவும், அவளுடைய தோழி முதலிய ஆயத்தில் உள்ளவராயின் தாம் வாழும் நிலத்தில் உள்ள வெல்லாம் அறிந்துகொள்ளும் வாய்ப்புடையராதலின் அந்நிலத் துள்ளன பற்றியறிதல் தவறில்லை யெனவும் புலப்படுத்தியவாறாம்.

உ ஆ கிழவோற் காயின் உரனொடு கிளக்கும்.

இளம்பூரணம்

என்-எனின். இது தலைமகன் உவமை கூறுமாறு ணர்த்துதல் துதலிற்று.

(இ-ள்.) தலைவன் உவமை கூறுவானாயின், அறிவொடு கிளக்கப்படும் என்றவாறு.*

அன்றியும், உரனொடு கிளக்கு முவமையெனப் பெயரெச்ச மாக்கிப் பெயர் வருவித்தலுமாம். உதாரணம் தலைவன் கூற்றுட் காணப்படும். (28)

$2 t: ஏனோர்க் கெல்லாம் இடம்வரை வின்றே.

(இ-ள்.) மேற்சொல்லப்பட்ட மூவருமல்லாத் நற்றாய் செவிலி

முதலாயிாைர்க்கு உவமை கூறுமிடம் வரையறுக்கப்பட தென்ற வாறு?, (உக)

பேராசிரியம்

கிழவோற் காயி னுரனொடுகிளக்கும் ஏனோர்க் கெல்லாம் இடம்வரை வின்றே.

இதுவும் அது.

1. தலைமகன் உவமைகூறுங்கால் இத்தகைய கிலவரையறையின்றி அவன்

பல விடங்களிலும் சென்றறிந்த பயிற்சியாகிய அறிவின் திறத்தால் எல்லாப்பொருள் பற்றியும் உவமை கூறுதற்குரியன் என்பதாம். உரனொடு கிளத்தலாவது தான் பயின் துணர்ந்த உணர்வுடைமையால் பலவகைப்பொருள்களின் தன்மையுணர்ந்து அவற்றை உவமையாக எடுத்துரைத்தல்,

2. ఇ Gari-am a Gur i; என்றது களவொழுக்கத்திற் கூற்று கிகழ்த்தற் குரியோரில் தலைவி, தோழி, தலைமகன் என மேற் கூறப்பட்ட மூவருமல்லாத கற்றாய், செவிலி மு தலாயினோரை,