பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் - நூற்பா க இ

ஆமா இதுவென்று அறியுமாகலானென்பது. இவ்வோத்தின் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், உவமத்திற்கெல்லாம் பொதுவிலக்கணங்கூறி அவற்றது பெயரும் முறையுந் தொகையும் உணர்த்துதல் துதலிற்று.

(இ - ள்.) தொழிலும், பயனும், வடிவும் வண்ணமும் என்னும் நான்கெனப்படுங் கூறுபட வரும் உவமத்தோற்றம். (எ-று).

உவமம்’ என்பதனை வினைமுதலாகிய நான்கினொடுங் கூட்டி வினை யுவமம், பயனுவமம், மெய்யுவமம், உருவுவமமெனப் பெயர்

கூறப்படும்.

வினையாற் பயப்பது பயனாதலின் பயத்திற்குமுன் வினை கூறப்பட்டது; அதுபோலப் பிழம்பினால் தோன்றும் நிறத்தினை அதற்குப்பின் வைத்தான்;பயனும் பொருளாக நோக்கி மெய்யினையும் அதனுடன் வைத்தானென்பது. மற்று மெய்யெனப்படுவது பொருளா தலின், அதன் புடைபெயர்ச்சியாகிய வினைபிற்கூறுக வெனின், வினையுவமந் தன்னுருபு தொக்கு நில்லாது விரிந்தே நிற்றற் சிறப் புடையனவும் உளவாக நோக்கி அது முற் கூறினானென்பது. அது புலிமறவன்' எனத் தொகாது புலியன்ன மறவன்' என விரிந்தே

1. ஆமா இது எனக்கண்டறியாதானுக்கு ஆபோலும் ஆமா என ຂ− ນ. ຂໍ້ கூறினால் அவன் காட்டுட்சென்றுழி ஆபோலும் ஆமா? எனத்தான் கேள்வி யுற்ற அவ்வுவமையேபற்றி ஆமா இது என்று கண்டறிவானாதலால் உவமத்தாலும் பொருள் புலப்பாடே கூறுகின்றார். ஆகவே மேற்பொருள் புலப்பாடு கூறிய மெய்ப் பாட்டியலோடு இயைபுடையது இவ்வுவமஇயல் ஆதலின் அதனை அடுத்து

வைக்கப்பெற்றது.

2. (இவ்வோத்தின் தலைச் சூத்திரம்) . இவ்வியலின் முதற்குத்திரம்.