பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா டிஎ 寄?。リf

' களிறுங் கந்தும் போல நளிகடற்

கூம்புங் கலனுந் தோன்று ந் தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே’’

என வரும்; பிறவும் அன்ன.

என்றார்க்கு, நிரனிறுத் தமைத்தல் நிரனிறை ஏனை, வரை நிலை வைத்த மூன்றலங் கடையே’ என்னாது சுண்ணத்தினை வரைந்தோதியது என்னையெனின், அவை மூன்றுஞ் சுண்ணம் போலச் சுண்ணஞ் செய்யப்படுதலின் அவ்வாற்றாஞ் சிதர்ந்து கிடப்ப உவமையுங் கூறின் அது பொருள் விளக்காதென்பது அறிவித்தற்கென்பது, என்னை? அடிமறியுள் ஒரடியுள் உவமங் கூறி ஒரடி யுட் பொருள்வைத்தால் இனிது பொருள்கொள்ளாது அடிமறிக்குங் காலைப் பிறிது பிறிதாக லுடைத்து. இனி ஒரடியுள் உவ மங்கூறிப் பின்னர் எத்துணையுஞ் சென்று பொருள்கூறி மொழி மாற்றிக்கொள்ள வைப்பின் அதுவும் உவமத்தாற் பொருள் தோன்றாது. சுண்ணத்திற்கும் அஃதொக்கும்.

இனி, இவ்வோத்தினிற் கூறுகின்ற உவமங்களுட் சிலவற் றையுஞ் சொல்லதிகாரத்தினுள்ளுஞ் செய்யுளியலுள்ளுஞ் சொல் லுகின்றன. சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு மற்றவை செய் யுட்கனனே அணியாமென இக்காலத்தாசிரியர் நூல் செய்தாரு முளர், அவை ஒரு தலையாகச் செய்யுட்கு அணியென்று இலக்கணங் கூறப்படா. என்னை? வல்லார் செய்யின் அணியாகியும் அல்லார் செய்யின் அணியன்றாகியும் வருந், தாங்காட்டிய இலக்கணத்திற் சிதையா வழியுமென்பது. என்னை?

நாயகர்க்கு நாய்கள்போ னட்பிற் பிறழாது

கூஉய்க் குழாஅ முடன்கொட்கு- மாய்படை பன்றி யனையர் பகைவேந்த ராங்கவர் சென்றெவன் செய்வர் செரு’’

என்றவழி, நாய்போலும் நட்புடையர் படையாளரென்பது வினை. யுவமம்; பன்றியனை யர் பகைவேந்தரென்பது நாய்க்குப் பகையாகிய பன்றிபோலவென்பது. வேற்றுவேந்தர் பகைவராதலால் அவ்வுவமை விலக்கரிது அன்றாமாயினும் அஃதணி யெனப்படாது, உவமைதான் உயர்ந்ததின்மையின். அது குற்றமென்றோவெனின்,