பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உவமையியல் - நூற்பா அ

௩௩
   "ஒத்த தறிவான்"                 (குறள். 214)

என்பதுபோலக் கொள்க (அ)

ஆய்வுரை

    இஃது உவமைக்குரியதோர் இயல்புணர்த்துகின்றது.

(இ.ள்) உவமானமும் உவமேயமும் தம்மின் ஒத்துள்ளன என உலகத்தார் ஏற்கும் வண்ணம் உவமையமைதல் வேண்டும். (எ-று)

பொருள் புலப்பாட்டிற்குரிய கருவியாக அமைவது உவமையாயினும், தமக்குத் தோன்றினவற்றையெல்லாம் உவமையாகக் கூறாது, எடுத்துக்கொண்ட பொருளுக்கு ஏற்புடையன என உலகத்தார் ஒத்துக்கொள்ளத்தக்கவற்றையே உவமையாகக்கூறுதல் வேண்டும் என்பது இச்சூத்திரத்தின் நோக்கமாகும். இந்நுட்பத்தினைப் பேராசிரியர் காட்டிய உவமை விளக்கங்களால் நன்குணரலாம்.

       பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினும்
        மருளறு சிறப்பின ஃ துவமமாகும்.

இளம்பூரணம்

என்-எனின். இதுவும் உவமைக்கண் வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) உவமிக்கும் பொருடன்னை உவமமாக்கிக் கூறினும் மயக்கமற்ற சிறப்பு நிலைமையான் எய்தும் உவமையாகு மென்றவாறு.”

1. உவமை- உவமானம், பொருள்-உவமேயம்.

'ஒத்தது அறிவான் (குறள். 214) என் புழிப்போல இங்கு ஒத்தல் என்றது, உலககடையுடன் ஒத்து அமைதலை .

2. உமேயம் எனப்படும் பொருளையே உவமையாக்கிக் கூறினாலும் மயக்க மற்ற சிறப்புகிலைமையால் அஃது உவமமாகவே நின்று பொருள் புலப்பாட்டிற்குப்பயன்படும் என்பதாம்.