பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உவமையியல்-நூற்பா க ௩௵

பேராசிரியம்

இது, மேற்கூறியவாறன்றி வருவதோர் உவமை விகற்பங் கூறுகின்றது.

 (இ. ள்) "உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை’’ (தொல், பொருள் 278) என்புழி உவமம் உயர்ந்துவரல் வேண்டுமென்றான், இனிப் பொருளினை உவமமாக்கி உவமையை உவமிக்கப் படும் பொருளாக்கி மயங்கக்கூறுங் காலும் அஃது உவமம்போல உயர்ந்த தாக்கி வைக்கப்படும் என்றவாறு. '
   "வருமுலை யன்ன வன்முகை யுடைந்து
    திருமுக மவிழ்ந்த தெய்வத் தாமரை”   (சிறுபாண். 72-73)

என்றவழி, வருமுலையுந் திருமுகமும் ஈண்டு உவமையாகி முகையும் பூவும் பொருளாயின; ஆண்டு முலையும் முகமும் உயர்ந்தவாகச் செய்தமையின் அவையே உவமமாயின.

இவை உவமைத்தொகையாங்கால் முலைக்கோங்கம் முகத் தாமரை எனப்புடும். இவற்றை வேறு உருவகமென்றும் பிறர் மயங்குப. சிறப்பென்றதனான் ஒப்புமை மாத்திரையன்றித் தான் புனைந்துரைக்கக் கருதிய முலையினையும் முகத்தினையும் உயர்ந்த பொருளாகிய உவமத்தினும் உயர்ந்தவாகச் சிறப்பித்துரைத்தா என்பது. மருளறு சிறப்பின் என்றதனான் அங்ங்னஞ் சிறப்பிக்

1. பொருளே உவமஞ்செய்தலாவது, பொருள் புலப்பாட்டுக்குரிய உவமேயமாகிய பொருளையே உவமையாக்கி உலகத்தார் மரபாக வழங்கும் உவமையை உவமிக்கப்படும் பொருளாக்கிக் கூறுதல். 'தாமரைபோன்று மலர்த்தமுகம்' என்புழி முகம் என்பது உவமிக்கப்படும் பொருள். தாமரை என்பது முகத்திற்கு உவமை. இங்ங்னம் உவமம் கூறுதலே இயல்பான மரபு. இதனை மாற்றி முகமாகிய பொருளை உவமம் ஆக்கியும் உவமையாகிய தாமரையை உவமிக்கப்படும் பொருளாக்கியும் 'திருமுகம் அவிழ்ந்த தெய்வத்தாமரை' என உவமை கூறிய நிலையில் முகத்தினைத்த மரையினும் உயர்வுடையதாக மயக்கங் தீரச் சிறப்பித்துரைத் தமையால் குற்றமற்ற மரபின் உவமையாயிற்று. இங்ஙணம் முகம் ஒக்குங்தாமரை எனப்பொருளையே உவமையாக்கிக் கூறுங்கால் இவ்விரண்டற்கும் இடையேயமைந்த மலர்ச்சியாகிய சிறப்புடைமை பொருளாகிய முகத்திற்கே மேலும் சிறப்பினைத்தருதலின் உயர்ந்ததன்மேற்று' என உவமைக்குக் கூறும் அவ்விதி முகமாகிய அப்பொருட்கும் எய்துவிக்கப்பெறும் என்பார், 'மருளறு சிறப்பின் அஃது உவமமாகும்' என்றார். இத்தொடரில் 'அஃது என்றது உவமிக்கப்படும் பொருளாகிய முகத்தினையாதலின் உயர்ந்ததன் மேற்றே என உவமைக்குக் கூறிய அவ்விதியை அதற்கும் எய்துவிக்க என்றார் பேராசிரியர்,