பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் - நூற்பா கக శ్రీ భ

பேராசிரியம்

இது மேற்கூறிய உவமை இன்னுமொருவாற்றான் எட்டெ னப்படு மென்பது உணர்த்துதல் துதலிற்று.*

(இ - ள்) பெருமைபற்றியுஞ் சிறுமைபற்றியும் ஒப்புமை கொள்ளப்படும் உவமை மேற்கூறிய மெய்ப்பாடெட்டன்வழித்

தோன்றுமென்று சொல்லுவர் புலவர் (எ - று)

மெய்ப்பாடு எட்டென்பன :

நகையே யழுகை யிளிவரன் மருட்கை யச்சம் பெருமிதம் வெகுளி யுவகை (தொல். பொருள்-251)

என மெய்ப்பாட்டியலுண் மேற்கூறப்பட்டன.

களவுடம் படுநரிற் கவிழ்ந்து நிலங் கிளையா’’ (அகம்.16)

என்பது ககையுவமம் : என்னை ? தலைமகனைக் கண்டறியாதாள் போலக் கரந்தொழுகுகின்ற பரத்தை அவனோடு ஒப்புமை கண்டு தனிநின்று விளையாடும் புதல்வனைக் கொண்டு மகிழ்கின்றாளை வாயிற்கதவம் மறைந்து நின்ற தலைமகள் நீயும் அம்மகவிற்குத் தாயேகாண் என்றுவழிச், களவுகண்ட பொருளோடு கையகப்பட்ட கள்வர்போலச் செய்வதறியாது தடுமாறி முகம் வேறுபட்ட நிலைமையை உவமித்துச் சிரித்தமையின் நகையுவம மாயிற்று.

'கலங்கவிழ்ந்த நாய்கன் போற் களை துணை பிற தின்றிப் புலம்புமென் னிலைகண்டும் போகலனே யென்றியால்’’ (யா.வி.பா. 318)

என்பது, அவலவுவமை; கலங்கவிழ்ந்த நீகாமன்போலப் புலம் பினாளென்றமையின் அப்பெயர்த்தாயிற்று.

'பெருஞ்செல்வ ரில்லத்து நல்கூர்ந்தார் போல

வருஞ்செல்லும் பேருமென் னெஞ்சு’’ (முத்தொள். 88)

என்பது, இனி லுவமம்; என்னை ? தலைமகன்மாட்டு இன்ப விளையாட்டெய்துவார் பலரையுங் கண்டு நெஞ்சு தீரப் புன்க ணெய்தித் தனிநின்று புகப்பெறாது இளிவந்தமையின் அப்பெயர்த் தாயிற்று.

1. எண் வகை மெய்ப்பாடும் பற்றி உவமை எ ட்டெனப்படும் என்கின்றது.