பக்கம்:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை கல்வி, இருவகைப்படும். ஒன்று எண்ணும் ஆற்றலைப் பெறுதல்: மற்றென்று பல்வேறு கருத்துக்களை அறிந்துகொள்ளுதல், மக்கட்ரூத் தாய்மொழியே இயல்பான கருவியாதலால், இவ்விருவகைக் கல்விக்கும் எணிதாக அது பயன்படும்; மேலும், எண்ணும் ஆற்றலைப் பெருக்கு தற்குத் தாய்மொழிக் கல்வியே சிறப்பின் உரித்தாகின்றது. அதனிலும், இலக்கணப் பயிற்சியால் அவ் வன்மை மிகச் செழித்து நுணு கொழுந்தோடி வளர்கின்றது. தமிழ்மொழியில் இலக்கண அமைப்பு, இணையற்ற ஆற்றலோடும் அழகுகலோடும்' அமைக்திருக்கின்றது. தமிழ்மக்கள் அவ்வகையில் தவப்பேறுடையரென்றே கூறுதல் வேண்டும். இனிய இயற்கை நெறிக னோடு தமிழ் இலக்கணத்தைத் திறம்பட விளக்கும் முழுமுதல் நூல் தமிழில் தொல்காப்பியமாகும். இஃதொன்றே பழைமையும் முதன்மையும் வாய்ந்து, சிக்கலின்றித் தெளிந்து, ஐந்திலக்கணமும் விளக்கும் அரும் பெருநூலாகத் திகழ்கின்றது. இதனைப் பன்முறை கற்று ஆழ்ந்து பயில்வோர் எண்ணும் ஆற்றலும், பல்வேறு கருத்துக்களை அறிந்து கொள்ளுதலுமின்றி, மெய்யுணர்வுப்பேரும் எனீதின் எய்திச் சான்ரோவரி. தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களாக வருக்கப்பட்டுள்ளது. இந்தலின் துட்பதிட்பம், பெருமை பயன் முதலியவற்குலேயே இருற்கு ரையாசிரியன்மாரும் பலர் அமைந்தனர். அவர் பவர் எழுதிய உரையுள்ளும், எழுத் ததிகாரத்திற்கு நச்சினார்க்கினிய ருரையும், சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையருரையும், பொருளதிகாரத்தின் இறுதி நான்கியல்களுக்குப் பேராசிரியருரையும் பெருவமக்காகப் பயிலப்பட்டு வருகின் றன. இவ் வருமை கருதிக் கழகத்தில் இதற்குமுன், தொல்காப்பியம் எழுத்ததி காரம் ஈச்சினார்க்கினிய குரையுடன் ஐந்துமுறை பதிக்கப்பெற்று வெளிவர்திருக்கின்றது. இப்போது ஆழும் பதிப்பாக இதனை, உரிய தலைப்புக்கள் உட்பிரிவுகள் முதலியவற்றுடன் மிகத் திருத்தமாக வெளியிடுகின்றனம். பயில்வோரது ஆர்வத்துக்கு ஏற்ற உதவியாவிருக்கும்படி இப் பதிப்பு மேலும் சில நலன்களைப் பெற்றுள்ளது. தொல்காப்பிய நூற் பாக்களிலும், அவற்றிற்கு கச்சினார்க்கினியர் எழுதிய உரைகளினும் மாணாக்கர் கன்றாக விளக்கம் பெறவேண்டிய பகுதிகளின்மேல், தக்க ஆராய்ச்சிக் குறிப்புக்களும் விளக்கங்களும் மேற்கோனிடங்களுடன்,