பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா ) 庇”茂盛了

ஆய்வுரை ; இது, காமக்கிழத்தியர் கூற்றுநிகழ்த்துமிடங்க ளைத் தொகுத்துக் கூறுகின்றது,

(இ - ள்.) தலைவன் தம்மொடும் பிற மகளிரொடும் கூடி மகிழ்தலை விரவி மேற்கொள்ளுதலால் உளதாகிய புலவியிடத் தும், மனையகத்தாராகிய தலைவி முதலியோர் தம்மை மதியாது. செய்தசெயல்களை இகழும் நிலையிலும், தலைவனுக்குப் பெண்டிர் பலரிடத்தும் பிறந்த புதல்வர்களைக் கண்டு உவகை மீக் கூர்ந்த நிலையிலும், களவொழுக்கம் ஒழு கிமணந்து மனையறம் நிகழ்த்தும் மனைவி தம்மைக் குறித்துச் செய்யும்-தமக்குப் பொறுக்க வொன் னாததாய்ப் பெருகிய துன்பத்தின் கண்ணும் , தம்பா லுளதாகிய காதற்சோர்வினாலும் மனையரக் கடமைகளை ஆளுதலாகிய ஒப்புரவுடைமையினாலும் தாய்போல் நின்று இடித்துரைத்துமனைக் கிழத்தியாகிய தலைவியை வெகுளுதலின்றித் தலைவ னொடு பொருந்தி வாழச் செய்தற் கண்ணும், தாம் வாயில் மறுத்த நிலை யில் இனிய மகிழ்ச்சியை விளைக்கும் புதல்வனை அன்பினால் தழுவி அணிகலனணிந்து பின்னர் வாயிலாகக் கொண்டு வந்த வாயில்களிடத்தும், மனைக் கிழத்தியாகிய தலைவியோடு ஒத்த வுரிமையுடைய வளாகத் தன்னைக் கருதுதலால் தன்னையொத்த ஏனைமகளிரினும் தான் தலைவனுக்குச் சிறந்தாள் గ్ర" గ్రత கொண்ட கோட்பாட்டின் கண்ணும், தலைவன் நிகழ்த்துவனவாகக் காதலர் கலந்துகொள்ளும் விளையாட்டுக்கள் என்று சொல்லப் பட்ட இவற்றோடு பிறவும் மனைவியுடன் ஒப்பவைத்து எண்ணத் திக்க காமக்கிழத்தியர் கூற்று நிகழ்த் தற்குரிய இடங்களாம். எ - று

புல்லுதல் - புணர்தல், மயக்குதலாவது ஒரு கால் தம்மிடத்தும் மற்றொருகால் பிறரிடத்தும் ஆக விரவி நிகழச் செய்தல்,

மனையறக் கடமைகளில் உரிமை காமக் கிழத்தியர்க்கு உண்டு என்பது புலப்படக் கண்ணிய காமக் கிழத்தியர்' என அடைபுணர்த்த்ோதினார். கண்ணுதல்-கருதப்படுதல் வாழ்க் கைத் துணைவியாகிய மனைவியொடு ஒப்ப மதிக்கப் பெறுதல்,