பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா க

இது, கற்பென்னும் ஒழுகலாற்றின் இலக்கணம் கூறுகின்றது.

( இ-ள்) கற்பென்று சொல்லப்படும் ஒழுகலாறாவது, கரணத்தொடு பொருந்தி, மணந்து கொள்ளுதற்குரிய இயல்பினை புடைய தலைவன் தனக்கு உரிமையுடைய தலைவியைக் கொடுத்தற்குரிய சுற்றத்தார் கொடுப்ப ஏற்று மணஞ்செய்து கொள்ளும் முறைமை யாகும் எ-று

கற்பெனப்படுவது என்னும் எழுவாய், கொள்வது என்னும் பெயர்ப்பயனிலை கொண்டது. கொள்ளுதற்குரிய மரபாவது, காதலர் இருவர்க்கிடையே அமைய வேண்டிய பிறப்பு முதலிய பண்புகளாற் பொருந்தித் தலைமகளாற் காதலிக்கப் பெறும கெழுதகைமையாகிய உரிமை யுடையனாதல். இத்தகைய வுரிமை யுடைய தலைவனே தலைவியை மணந்து கொள்ளுதற்குரிய தகுதியுடையான் என விதிக்கும் முறையில் கொளற்குரிமரபிற் கிழவன்' என அடைபுணர்த்தோதினார். கிழத்தியை' என்பது இடைநிலை விளக்காக நின்று கிழத்தியைக் கொளற்குரி மரபிற் கிழவன்' எனவும், கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்ப' எனவும் ஈரிடத்துஞ் சென்றியைந்தது. மனையரத்தினை நிகழ்த்தற்குரிய ஒருவன் ஒருத்தி யென்னும் இருவரும் ஒருவரை யொருவர் அன்பினால் இன்றியமையாதவராக உள்ளம் ஒத்து ஒழுகும கெழுதகைமையாகிய உணர்வுரிமையே அவ்விருவரும் உலகத்தாரறியத் திருமணம் புரிந்து கொள்ளு தற்குரிய தகுதியாம் என வற்புறுத்தும் நிலையில் அவ்விருவரையும் கிழவன் கிழத்தி என்ற பெயராற் கிளந்து ஒதினார் தொல்காப்பியனார். எனவே ஒருவன் ஒருத்தியென்னும் இருவரும் தம்முள் ஒத்த காதற்கிழமை யுடையராயினன்றித் திருமணம் செய்துகோடற் குரியரல்லர் என்பதும், காதலர் இருவர் இசைவுடன் மகட்கொடைக்குரியராகிய தலைவியின் பெற்றோரது இசைவும் ஒருங்கே கிடைப்பின் உல கத்தார் அத் திருமணத்தினை ஐயத்திற்கிடனின்றித் தெளிந்து உடன்படுவர் என்பதும் இதனாற் புலனாதல் காணலாம். (க)

உ. கொடுப்போர் இன்றியுங் கரண முண்டே

புணர்ந்துடன் போகிய காலை யான.

1. புணர்ந்து உடன்போகிய காலை . தலைவனும் தலைவியும் பெற்றோர்

அறியாது உடன் போக்கிற் போகிய காலம்.