பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா உன *岛捡

எல்லா வாயில்கட்கும் உரிய; பின்னிலைமுயலுங்கால் தோன்றும் என்றவாறு.

முன்னிலைப் புறமொழியாவது முன்னிலையாக நிற்பாரைக் குறித்துப் பிறனைக் கூறுமாறுபோலக் கூறுதல்.

  • உண் கடன் வழிமொழிந் திரக்குங்கால் முகனுந்தாங்

கொண்டது கொடுக் குங்கால் முகனும்வே ருகுதல் பண்டுமிவ் வுலகத் தியற்கை’’ (கலித். உஉ} என்றவழி அவ்வுரை தலைமகனை நோக்கியவாறு காண்க. (உசு)

நச்சினார்க்கினியம் : இது வாயில் கட்கு உரியதோர் பகுதி கூறுகின்றது.

(இ - ள். முன்னிலைப் புறமொழி - முன்னிலையாய் நிற் கின்ற தலைவனை நோக்கிப் பிறரைக் கூறுமாறுபோலக் கூறுதல், எல்லா வாயிற்கும்-பன்னிரண்டு வாயில்களுக்கும்; பின்னிலைத் தோன்றும் என் மனர் புலவர் குறைவேண்டி முயலுங்கால் தோன்றுமென்று கூறுவர் புலவர் (எ. மு).

'உண்கடன் வழிமொழிந் திரக்குங்கால் ... தாயுயிர் பெய்த பாவை போல நலனுடை யார் மொழிக்கண் தாவார்தாந் தந்தலந் தாதுதேர் பறவையினருந்திறல் கொடுக்குங்கால் ஏதிலார் கூறுவ தெவனேநின் பொருள் வேட்கை'{கலி. 22)

எனத் தலைவனை நோக்கி முன்னிலைப் புறமொழியாகக்

கூறிற்று. (உசு) ஆய்வுரை இதுவும் வாயில்கட் காவதோர் சொற்றிறம் கூறுகின்றது.

(இ. ஸ்) முன்னிலையில் உள்ளாரைக் கு றி த் து ப் படர்க்கை யிடமாகிய புறத்தேயுள்ளார் போற் கூறும் சொல், எல்லா வாயில்கட்கும் குறைவேண்டிப் பின்னிற்குங்கால் தோன் துறும் என்பர் அறிஞர் எ - று.

பின்னிலை - குறைவேண்டிப் பின்னிற்றல், ఒ7 தொல்லவை உரைத்தலும் நுகர்ச்சி ஏத்தலும்

பல்லாற் றானும் ஊடலில் தகைத்தலும் ? உறுதி காட்டலும் அறிவுமெய்ந் நிறுத்தலும்

ജ്ഞ --ബ- ബങ്ങ

1. பின்னிலை முயலுங்காலமாவது, ஒன்றினை வேண்டிக்குறையுற்று கிற்குங்

காலம்,

2. தணித்தலும் என்பது கச்சினார்க்கினியர் கொண்டபாடம்.