பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ff<;.5;r தொல்காபபியம்-பொருளதிகாரம்

கூடுவதோர் ஆற்றல் உறுதி பயக்குமாயின் அவ்வாயில்கட்கு உளதாம் (உ-று )

'அறியா மையின் அன்னை யஞ்சி' (நற்றிணை 50} இதனுள், என்னறியாமையாலே அன்னாய் நின்னையஞ்சி யாங் கள்வன் துணங்கையாடுங் களவைக் கையகப் படுப்பேமாகச் செல்லா நிற்க, அவன் குழை முதலியவற்றை உடையனாய்த் தெருவு முடிந்த இடத்தே எதிர்ப்பட்டானாக. அவ்வருளாமையின் யாண்டையது எ ன் க ட் பசலையென்றானாக, அவனெதிரே என்சிறுமை பெரிதாகலான் ஆராயாதே துணிந்து நாணிலை எலுவ வந்தேனெனத் தோழி மெய்யானும் பொய்யானும் புனைந் துரைத்தவாறு காண்க. ஏனைய வாயில்கள் கூற்றுவந்துழிக் காண்க.

இங்ங்னந் தலைவன் சிறைப்புறமாகக் கூறுவன அன்புதலை’ பிரிந்த கிளவி தோன்றின்’ (தொல், பொ. 179) என்புழிக் கூறுதும். ஆய்வுரை : இது, மேலதற்கோர் புறனடை கூறுகின்றது. (இ-ள்) தலைவனது கொடுமை காரணமாக மனைவி யின் முன்னிலையில் வாயில்களாவார் செயலற்றுக் கூறுஞ்சொல்" மனைவியின் ஆற்றாமைநோய்க்கு மருந்தாய் உறுதி விளைக்குமா யின் அவ்வாயில்கட்கு உண்டு. எ-று.

கையறு கிளவி, செயலற்ற தன்மையைப் புலப்படுத்தும் முறையிற் கூறப்படும் இரங்கல்மொழி.

எனவே, மனைவிக்கு உறுதிவிளைத்தல் இன்றி மேலும் இரக்கத்தினை மிகுவிக்குமாயின் கையறு கிளவி விலக் கப்படும் என்பதாம்.

உசு. முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும் பின்னிலைத் தோன்றும் என்மனுர் புலவர்.

இளம்பூரணம் : இதுவுமது.

(இ. ள். முன்னிலைப் புறமொழியாகக் கூறு ஞ் சொல்

1. உறுதியுள்வழி ஆவது, தலைவியின் புலவியைத் தீர்க்கும் மருந்தாய்த்

தலைவன் வருதல் திண்ணம் என்னும் துணிவினைத்தரும் இடம் எனப்பொருள் கொள்ளினும் அமையும்,