பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*க்உ தொல்காப்பியம்-பொருளதிகாரக்

o ஆய்வுரை : இது, பார்ப்பார்க்குரிய கிளவிகளைத் தொகுதி துக் கூறுகின்றது. - -

( இ-ள்) காதலரின்டயே வேட்கை நிலையினை எடுத் துரைத்தலும் தலைவன் ஊர்ந்து வரும் தேரின் நிலைமையைக் கூறுதலும், தலைவனது உள்ளக்குறிப்பினைத் தலைவிக்கு விளங். கக் கூறுதலும், பசு முதலாகப் பொருந்திய நன்னிமித்தங்களை உணர்ந்து கூறுதலும், தலைமகன் பிரிந்து சென்ற செய்தியைக் கூறுதலும், பிரியக்கருதிய தலைவனை நோக்கி, நீ செல்லாது சிவ. ந்ாட்கள் தாமதித்தல் வேண்டும் என்க்கூறுதலும் அவைபோல் வன பிரவும் பார்ப்பார்க்குரிய கூற்றுக்களாகும். எ-று.

செலவு அழுங்குதல்-பிரிந்து செல்லக்கருதிய தலைவன் உடனே புறப்படாது சிலநாட்கள் தாமதித்தல். தேர்நிலையுரைத் தல் என்பதற்கு 'ஆராய்ச்சி நிலையாற் கூறுதல்' என இளம்பூர் னரும், 'தலைவன் தேருமாறு ஏதுவும் எடுத்துக்காட்டுங்கூறல்” என நச்சினார்க்கினியரும் பொருள் கொள்வர். நல்லது தேர்ந்து கொள்க. - கா. எல்லா வாயிலும் இருவர் தேனத்தும்

புல்லிய மகிழ்ச்சிப் பொருள என்ப. இளம்பூரணம்: இது வாயில்கட் குள்ளதொரு மரபு உணர்த்திற்று (இ-ள்) வாயில்கள் எல்லாம் இருவர் மாட்டும் பொருந்திய மகிழ்ச்சிப் பொருண்மையுடைய என்ற வர்று.

இருவராவார் தலைவனுந் தலைவியும். எனவே, வெகுட்சிப், பொருண்மை கூறப்பெறார் என்றவாறு. o (எ) நச்சினார்க்கினியம்; இது வாயில்களின் இலக்கணங்கூறுகின்றது. (இ-ள்) எல்லாவாயிலும்-பார்ப்பான் முதலிய வாயில்க் ளெல்லாம்; இருவர் தேஎத்தும் புல்லிய-தலைவன் கண்ணுந் தலைவிகண்ணும் பொருந்திய, மகிழ்ச்சிப் பொருள என்ப்-மண மகிழ்ச்சிப் பொருளினை நிகழ்த்துதலைத் தமக்குப் பொருளாக வுடை யர் (எ-று) .

1. 'எல்ல வாயினும் என்பது எழுவாய், 'மகிழ்ச்சிப் பொருள்' என்பது: பயனிலை. மகிழ்ச்சிப்பெரு மகிழ்ச்சிப் பொருண்மையையுடையன. இருவர் தேளத்தும். இருவரிடத்தும். தேம் - இடம்.

2.புதர்ப்பதன். முதலிய எல்லாவாயில்களும் தலைவன் தலைவி என்னும்

இருவரிடத்தும் பொருக்திய மனமகிழ்ச்சிய்ைப் பொருளாக்க் கொண்டு கூற்று” கிகழ்த்தற்குரியர் என்பார், "இருவர் தேஎத்தும் புல்லிய மகிழ்ச்சிப் பெண்கள்’

ஏ ன்றார். புல் ஆதல் . பொருக்தல்,