பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா ச భీగ.

இளம்பூரணம் : என்றது, கரணமாகியவாறு உணர்த்துதல் துதலிற்று.

(இ:ள்.) பொய்கூறலும் வழுஉப்பட வொழுகலும் தோன் திய பின்னர் முனைவர் கரணத்தைக் கட்டினார் என்று சொல்வர் ক - g#. -

இரண்டுந் கோன்றுவது இரண்டாம் ஊழியின் கண்ணாதலின், முதலுாழியிற் கரணமின்றியே இல் வாழ்க்கை நடந்ததென்பது உம் இவை தோன்றிய பின்னர்க் கரனந் தோன்றின. தென்பது உம் கூறியவாறாயிற்று பொய்யாவது செய்ததனை மறைத்தல். வழு வாவது செய்ததன் கண் முடிய நில்லாது தப்பி யொழுகுதல். கரணத்தொடு முடிந்த சாலையின் அவை யிரண்டும் நிகழாவா மாதலாற் கரணம் வேண்டுவதாயிற்று."

நச்சினார்க்கினியம் : இது வேதத்திற் கரணம் ஒழிய ஆரிட மாகிய கரணம் பிறந்தவாறும் அதற்குக் காரணமுங் கூறுகின்றது.*

3. மக்கள் வாழ்க்கையிற் பொய்யும் வழுவும் தோன்றாத துனய கால்மாகிய மூதலூழியில் கரணம் எனப்படும் சடங்குமுறை வகுக்கப்படாமலே மக்களது கற்பியல் வாழ்க்கை தடையின்றி நிகழ்ந்ததென்பதும், தான் செய்ததன்னை மறைத் துப் பொய் கூறலும், செய்ததன் கண் உறைத்து கில்லாது வழுவிச் செல்லுதலும் ஆகிய குற்றங்கள் தோன்றிய பிற்காலத்திலேயே தமிழ்ச் சான்றோராகிய முனை வர்கள் திருமண ஒழுங்குமுறையாகிய கரணத்தினை அமைத்தனர் என்பதும் கரணத்துடன் திருமணம் நிகழ்ந்த நிலையில் பொய்யும் வழுவும் கிகழ்தற்கு இட மில்லா தொழிதலின் கற்பியல் வாழ்வுக்குக் கரணம் இன்றியமையாததாயிற்று என்பதும் இந்நூற்பாவிற்கு இளம்பூரணர் தரும் விளக்கமாகும். -

2. முன்னுள்ள நூற்பாவிற் குறிக்கப்பட்ட கரணம் வேதம் கடறிய கரணம் என் தும், இச்சூத்திரத்திற் கூறப்படும் கரணம் இருடிகள் யாத்த ஆரிடமாகிய கரணம் என் தும் இருவகைக் கரணங்கனாகப் பகுத்து அவற்றுள் ஒருவர் கட்டாமல் தாமே தோன் றிய வேதநூற்கரணம் கால்வகை வருணத்தார்க்கும் ஒன்றாய் அமைந்ததென்றும், பிற்காலத்தே இருடிகள் வகுத்த ஆரிடமாகிய கரணம் மேலோர் கரணமும் கீழோர் கரணமும் ஆக வேறுபட அமைந்தனவென்றும் கச்சினார்க்கினியர் கூறும் கரண வேறுபாட்டுக்கு இவ்விரு சூத்திரங்களிலும் இடமில்லை. ஐயர் யாத்தனர் கரணம் என்பன என்ற தொடரில் மேலோர்க்குரிய கரணம் வேறு, கீழோர் க்குரிய கரணம் வேறு எனக் கரண வேற்றுமை பற்றிய குறிப்பு இடம் பெறாமையும் கருதற்குரிய தாகும். இதன் கள் என்ப’’ என்றது முதனூலாசிரியரையன்று, வடநூலோரைக் கருதியது என கச்சினார்க்கினியர் தரும் விளக்கம் ஆதியூழியின் அந்தத்தே தமிழுக்கேயுரிய பொருளிலக்கணம் கூறிய தொல்காப்பியனார், பிற்காலத்தே கடமொழியில் தரும சாத்திரம் செய்த வட நூலாசிரியர் கூற்றினை மேற்கோளாக