பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா திக @.岛_疫,

இளம்பூரணம் : இது, வினைமுற்றி மீண்ட தலைவற். குரியதோர் மரபு உணர்த்திற்று.

சூத்திரத்தாற் பொருள் விளங்கும். "இடைச்சுர மருங்கிற் றவிர் த லில்லை என்பது வழியில் இடையிற்றங்காது. இரவும் பகலுமாக வருமென்பது கருத்து. தங்குவானாயின் மனையாள் மாட்டு விருப்பின்றாம், உ-ம் இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தென’ (அகம் அச) என வரும், பிறவும் மன்ன. (இங்} நச்சினார்க்கினியம் : இது பிரிந்து மீளுங்காற் செய்யத்தகு வதோர் இயல்பு கூறுகின்றது.

(இ-ள்.) வினைவயின் பிரிந்தோன் மீண்டு வரு காலையாதானுமோர் செய்வினையிடத்துப் பிரிந்தோன் அதனை முடித்து மீண்டுவருங் காலத்து இடைச்சுர மருங்கில் தவிர்தல் இல்லை. எத்துணைக்காதம் இடையிட்டதாயினும் அவ்விடையின்க ணுண் டாகிய ஒருவரு வழியிடத்துத் தங்கிவருதலில்லை ; உள்ளம்போல உற்றுழி உதவும் - உள்ளஞ் சேட்புலத்தை ஒரு கணத்திற் செல்லு மாறுபோலத் தலைவன் மனஞ் சென்றுற்றவிடத்தே ஒரு கணத்திற் சென்று உதவிசெய்யும் : புள் இயல் கலிமா உடைமை யான - புட்போல நிலந்தீண்டாத செலவினையுடைய கலித்த குதிரையுடையனாதலான் (எ-று.)

தேருங் குதிரையாலல்லது செல்லாமையிற் குதிரையைக் கூறினார், இஃது இடையில் தங்காது, இரவும்பகலுமாக வருதல் கூறிற்று. இதனை மீட்சிக்கெல்லை கூறிய சூத்திரங்களின் பின் வையாது, ஈண்டுத் துறவு கூறியதன் பின்னர் வைத்தார், இன்ப நுகர்ச்சியின்றி இருந்து அதன்மேல் இன்பமெய்துகின்ற நிலை யாமைநோக்கியும், மேலும் இன்பப் பகுதியாகிய பொருள் கூறு கின்றதற்கு அதிகாரப்படுத்தற்கு மென்றுணர்க.

வேந்துவினை முடித்த காலை' (அகம். 104) இதனுள் வினைமுடித்த காலைத் தேரிளையர் செலவிற் கேற்ப ஊராது கோலூன்றின் உலகிறந்தன செலவிற்குப் பற்றாத குதிரைத்தேரேறி இடைச்சுரத்தில் தங்காது மாலைக்காலத்து வந்து பூச்சூட்டினை இனிதுசெய்தனை எந்தை வாழிய எனத் தோழி கூறியவாறு காண்க.

"இருந்த வேந்த னருந்தொழின் முடித்தென" என்னும் அகப்பாட்டினுள்,