பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

స్త్రీ ప్తి * தொல்காப்பியம்-பொருளதிகாரம்

"புரிந்த காதலொடு பெருந்தேர் யானும் ஏறிய தறித்த தல்லது வந்தவாறு நனிபறித் தன்றோ விலனே இதியி னென்றதின் மொழிமருண் டிசினே

வான்வழங் கியற்கை வளிபூட்டினையோ மானுரு வாகநின் மனம்பூட்டினையோ

வரைமதி வாழி நீ வலவ' (அகம். 384) என உள்ளம்போல உற்றுழி உதவிற்றெனத் தலைவன் கூறிய வாறு காண்க. {டுக.)

நான்காவது கற்பியற்கு ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த காண்டிகையுரை முடிந்தது.

ஆய்வுரை . இது, வினைமுற்றி மீளும் தலைவர் குரியதோ: இயல்பு கூறுகின்றது. ~

(இ-ன் ஆள்வினை மேற் கொண்டு தலைவியைப் பிரிந்து செனற தலைவன் தான் வினைமுடித்து மீளுங்காலத்து இடைச் ஈரமாகிய வழியிடையே தங்கித் தாமதித்தல் இல்லை; தலைவி பின்பால் விரைந்து செல்லும் தனது உள்ளத்தைப் போன்று அதற்கு உற்றவிடத்து உறுதுணையாய் விரைந்து உதவும் இயல் 'பினையுடைய பறவையின் வேகத்தையுடைய மனச்செருக்கமைந்த

குதிரையை ஊர்தியாகப் பெற்றுள்ளமையால் எ-று.

வினை.வயிற்பிரிந்தோன் புள் இயற்கலிமா உடைமையான் இடைச்சுரமருங்கில் தவிர்தல் இல்லை என இயையும். தவிர்தலதங்குதல், இளைப்பாறிக் காலந் தாழ்த்தல். இடைவழியில் தங்கிக் காலந்தாழ்ததல் இல்லை எனவே வினைமுற்றிய தலைவன் தன் ஆருயிர்த்தலைவியின் பிரிவாற்றாமையைத் தவிர்த்தற்பொருட்டு வினைமுடிந்த அந்நிலையிலேயே மனைவியைக் காண விரைந்து மீள்வன் என்பதாயிற்று. இதனால் தலைவன் தன் ஆருயிர்த் தலைவி.பால் வைத்துள்ள பேரன்பின் திறத்தையும அவளது ஆற்றாமைத்துயரினைப் போக்குதற்கு முந்தும் அவனது அருளின் தீர்மையினையும ஆசிரியர் புலப்படுத்தியவாறு காண்க,

தவிர்தல் . தங்குதல். மா . குதிரை. உள்ளம் போல உற்றுழி உதவும் மா, புள்ளியல்மா, கலிமா எனத் தனித்தனி இயையும். உள்ளம் . மண்ம். குதிரையின் விசைக்த செலவுக்கு மனத்தினை புலமையாகக் கூறும் மரபுண்மை மானுருவாக மனம் பூட்டினையோ என வரும் பாடலாற்புலனாம். புள் இயல்மா பறவை போன்று கிலத்திற்ப்டியாத செலவினையுடைய குதிரை. கவி மா மனச் செருக்கால் துள் ரிச் செல் லும் இயல்பினை யுடைய குதிரை,