பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ : தொல்காப்பியம் - பொருளதிகாரம்

தமிழ் முன்னோராகிய தலைவர்களால் விதிக்கப் பெற்று வழங்கி வந்த தென்பதும் நன்கு துணியப்படும்.

டு கரணத்தின் அமைந்து முடிந்த காலை

நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும் எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்தும் அஞ்ச வந்த உரிமைக் கண்ணும் நன்னெறிப் படருந் தொன்னலப் பொருளினும் பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇக் குற்றஞ் சான்ற பொருளெடுத் துரைப்பினும் நாமக் காலத் துண்டெனத் தோழி ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும் அல்லல் தீர ஆர்வமொ டளைஇச் சொல்லுறு பொருளின் கண்ணுஞ் சொல்லென ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென அடிசிலும் பூவுந் தொடுத்தற் க்ண்னும்: அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் அந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினும் ஒழுக்கங் காட்டிய குறிப்பினும் ஒழுக்கத்துக் களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி அலமர லுள்ளமொ டளவிய இடத்தும் அந்தரத் தெழுதிய எழுத்தின் மான வந்த குற்றம் வழிகெட ஒழுகலும் அழியல் அஞ்சலென் றாயிரு பொருளினுந் தானவட் பிழைத்த பருவத் தானும் நோன்மையும் பெருமையும் மெய்கொள வருளிப்’ பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித்

بایستینسنت تفتی بسس

1. தோடுதற்கண்ணும்: ,ே மெய்கொனவருளிய' எனப் படங்கொள்வர் கச்சினார்க்கினியர்