பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r - தொல்காப்பியம் – பொருளதிகாரம் نفس سني

உறலருங்குரைமையி னுரடன் மிகுத்தோளைப் பிற பிற பெண்டிரிற் பெயர்த்தற்கண்ணும் என்பது- ஊடல் மிகுத் தோளை உறுதற்கருமையாற் பிறபிற பெண்டிர் ஏதுவாக ஊடல் உணர்த்தற்கண்ணும் என்றவாறு,

புனவளர் பூங்கொடி யன்னாய்’ என்னும் மருதக் கலியுள்,

ஒருத்தி புலவியாற் புல்லா திருந்தாள் அலவுற்று

வண்டினம் ஆர்ப்ப இடைவிட்டுக் காதலன் தண்தார் அகலம் புகும் (கலி, கஉ)

எனப் பிறபிற பெண்டிரைக் காட்டித் தலைவன் ஊடலுணர்த் தியவாறு அறிந்து கொள்க.

பிரிவினெச்சத்துப் புலம்பிய விருவரைப் பரிவு நீக்கிய பகுதிக்கண்ணும்' என்பது பிரிவு நிமித்தமாக வருந்திய மனை பாளையும் காமக்கிழத்தியையும் அவ் வருத்தத்து நின்று நீக்கிய பகுதிக் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு; அஃதாவது பிரியேன் என்றல்.

பொன்னும் மணியும் ...பெரிதே (நற்றினை ககசு)

இக்கூற்று இருவர்மாட்டும் ஒக்கும்.

நின்றுநணி பிரிவின் அஞ்சிய பையுளும்" என்பது

நிலைநிற்க மிகப்பிரியும் பிரிவின் கண் அஞ்சிய நோயின் கண்னும் கூற்று நிகழும் என்றவாறு.

1. ‘உறலகுமையின் ' எனற்பாலது, குரை' என்னும் அசைபெற்று உத

லருங்குரை மையின் என்ற விற்று.

2, பிரிவின் எ ச் சத்து-பிரிவுகாரணமாக. எச்சம் என்றது, 'நிமித்தம்’ என்ற பொருளில் ஆளப்பெற்றது.

புலம்புதல்-தனிமையுற்று வருந்துதல். இருவர் என்றது, தலைவி, காமக்கிழத்தி ைன்னும் இருவரை.

- 3. கின்று கனி பிரிவு-புணர்வின்றி கிற்க கெடுகாட் பிரிங் துறைதலாகிய பிரிவு இ யு ள-வரு த் தம்:கோய்,