பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

தொல் காப்பியப் பொருளதிகாரத்தின் நான்காவது இயலாக அமைந்தது கற்பியலாகும். இஃது அன்பின் ஐந்தினையொழுக வாற்றில் அன்பினால் ஒத்த தலைவனும் தலைவியும் உலகத்தா சறிய மணம்புரிந்து வாழும் மனை வாழ்க்கையாகிய கற்பியல் ஒழுகலாற்றினை விரித்துக் கூறுதலின் கற்பியல் என்னும் பெயர்த்தாயிற்று, இவ்வியலுக்கு இளம்பூரண ருரையும் நச்சி னார்க்கினியருரையும் என இரண்டுரைகளேயுள்ளன. இவ்வுரை கள் இரண்டும் சூத்திரந்தோறும் கால அடைவின்படி ஒன்ரன் பின் ஒன்றாக இப்பதிப்பில் அமைக்கப்பெற்றுள்ளன. சூத்திரந் தோறும் தரப் பெற்றுள்ள இவ்வுரைகளின் பின்னே தொல்காப்பிய மூலத்தை அடியொற்றிச் சூத்திரத தின் கருத்தும் பொருளும் தெளிவாகப் புலனாகும் வண்ண ம் ஆராய்ந்தெழுதிய ஆய்வுரைப் பகு தி சேர்க்கப் பெற்றுளது. இவ்வியலுக்கு அமைந்த உரைக ளைப் பயில் வார்க்கு உறுதுணையாக எழுதப்பெற்ற உரை விளக்கங்கள் அவ்வவ்வுரைகளின் கீழ் அடிக்குறிப்பாகத் தரப்பேற் ரன. முன்னைய இயல்களிற் போலவே இவ்வியலிலும் சூத்திர எண்களும் பக்க எண்களும் தமிழெண்களாகத் தரப்பெற்றன.

இவ்வியலுக்கமைந்த பழையவுரைகள் இரண்டிலும் உரை யாசிரியர்களால் உதாரண மாகக் காட்டப்பெற்ற செய்யுட்பகுதி களுள அடிகள் மிகுந்து நீண்ட செய்யுட்களுக்கு முதற்குறிப்பும் நூற் பெயரும் செய்யுளின் எண்ணுமே தரப்பெற்றன. உரையா சிரியர்கள செய்யுட் பகுதிகளையெடுத்துக் காட்டி விளக்குமிடங் களில் மடடும் அச்செய்யுட்கள் உரையிர் கண்டவண்ணம் முழு வுருவில் அச்சிடப் பெற்றுளளன .

மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையின் சார்பில தொல்காபபிய உரைவ ள ம் . அகத் திணையியலுக்கு