பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1975இல் வெளிவந்துளது. அதனை மு. அருணாசலம் பிள்ளை பவர்கள் அவ்வியலுக்குக் கிடைத்துள்ள மூன்று உரைகளை யும் சூத்திரத்தோறும் ஆராய்ந்து கால முறைப்படி அமைத்து, இன்றியமையாத உரைவிளக்கங்களை அவ்வவ்வுரைகள் தோறும் அடிக்குறிப்பாகத் தந்து, அவற்றின் முடிவில் அச்சூத்திரப் பொருளை விரித்து விளக்கும்முறையில் தமது ஆய்வுரையினை பும் அமைத்து அகத்திணையியல் உரைவளத்தினை நிறைவு செய் துள்ளார். இங்ங்ணம் பேராசிரியர் மு. அருணாசலம் பிள்ள்ை யவர்களால் தொடங்கப் பெற்ற தொல்காப்பியப் பொருளதிகார உரை வளப் பணி, தொடர்ந்து பேராசிரியர் க. வெள்ளை வார னர் அவர்களால், தமிழியற்புலத்தில் அவர்கள் இரண்டாண்டு 'கள் பணியேற்றிருந்ததன் பயனாக நிறைவு செய்யப்பட்டுளது. இயல் வரிசையில் தனித்தனியே இந் நூல்கள் வெளியிடப்படு கின்றன .

மாணாக்காகட்கும் ஆய்வாளர் கட்கும் பெரிதும் பயன் படத்தக்க இந் நூல் வரிசை, கல்லூரி நூலகங்கள் தோறும்

இடம்பெறுதல் சாலும் மற்றும் தமிழாய்வாளர்கள் அனைவரும் இதனைப் பெற்றுப் பயனடைவார்களாக,

துேரை, பதிப்புத்துறை 盘983。 மதுரை காமராசர் பல்கலைக் கழகம்