பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா ரு శ్రీడి _

அதற்கேற்ற சடங்கு செய்துமென்றா ரெனவும், முற்காலத்து நாங் கேட்ப நமக்குக் கூறிய முனிவர் சொல்லும் உண்மையாயிற் றென வுங் கூறியவாறு காண்க. தலைவன் கூற்று வந்துழிக் காண்க,

புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதின் அங்ங்னஞ் சிறப் பெய்திய புதல்வனைப் பெற்ற ஈன்றணுமை சேர்ந்த காலத்தே:

நெய் அணி மயக்கம் புரிந்தோள் நோக்கி . சுற்றக் குழாத் துடனே வாலாமை வரைதலின்றி எண்ணெயாடும் மயக்கத்தை விரும்பிய தலைவியை முகமனாகக் கூறுதலைக் குறித்து :

ஐயர் பாங்கினும் - முனிவர் மாட்டும்:

அமரர்ச் சுட்டியும் தேவர்கள் புதல்வனைப் பாதுகாத்தலைக் கருதியும்:

செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும் - அக்காலத்துச் செய்யும் பெரிய சிறப்புக்களைக் குறித்த மனத்தோடே சென்று சார்தற்கண்ணும் :

சிறப்பாவன: பிறந்த புதல்வன் முகங்காண்டலும் ஐம்படை பூட்டலும் பெயரிடுதலும் முதலியனவும். எல்லா முனிவர்க்குந் தேவர்க்கும் அந்தணர்க்குங் கொடுத்தலும். சேர்தல் கூறவே, கருப்பம் முதிர்ந்த காலத்துத் தலைவன் பிறரொடு கூட்டமுண்மை புங் கூறிற்றாம். ஆண்டுத் தோழி கூறுவனவும் ஒன்றென. முடித்த’லாற் கொள்க.

'வாராய் பாண.........கைபுதைத் ததுவே...' (நற்றிணை,370)

இது நெய்யணி மயக்கம் பற்றித் தலைவன் கூறியது.

  • நெடுநா வொண்மணி கடிமனை இரட்டக்

குரையிலைப் போகிய விரவுமணற் பந்தர்ப் பெரும் பாண் காவல் பூண்டென வொருசார்த் திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப வெறியுற விரிந்த அறுவை மெல்லனைப் புனிறுநாறு செவிலியோடு புதல்வன் துஞ்ச ஐயவி அணிந்த நெய்யாட் டீரணிப் .