பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது. தொல்காப்பியம் - பொருளதிகாரம்

நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளிய பன்னல் சான்ற வாயிலொடு’ பொருந்தித் தன்னின் ஆகிய தகுதிக் கண்ணும்; தன்னின் ஆகிய நோன்மையும் பெருமையும் மெய் கொள - தலைவனான் உனதாகிய பொறையையுங் கல்வி முதலிய பெருமையையும் உடைய மகவைத் தலைவி தன் வயிற்றகத்தே கொள்கையினாலே; பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி அருளிய தகுதிக்கண்ணும் - வேதத்தை ஆராய்தல் அமைந்த அந்தணரோடு கூடி இருத்தற்குச் செய்யத்தகுஞ் சடங்குகளைச் செய்த தகுதிப்பாட்டின் கண்ணும்: -

'தன்னினாகிய மெய்" . கருப்பம், அவிப்பலிகொள்ளும் அங்கி யங்கடவுட்கும் அது கொடுக்குந் தலைவற்கும் இடையே நின்று கொடுப்பித்தலின் அந்தணரை அாயிலென்றார்.

ஆற்றல் சான்ற தாமே யன்றியும் நோற்றோர் மன்றநங் கேளிரவர் தகைமை வட்டிகைப் படுஉந் திட்ட மேய்ப்ப வரிமயி ரொழுகுநின் அவ்வயி றருளி மறைநவில் ஒழுக்கஞ் செய்தும் என்றனர் துனிதீர் கிளவிநம் தவத்தினும் நனிவாய்த் தனவால் முனிவர்தஞ் சொல்லே.

இதனுள், நந்தலைவரேயன்றிச் சுற்றத்தாரும் நோற்று ஒரு கருப்பந் தங்கிய நினது வயிற்றைக்கண்டு உவந்தெனவும்:

مسداخ--تیے ہم سمسمبے ب– کیبببیہیںپہ*

1. மெய் மகவு. கோள்ளுதல் வயிற்றகத்தேகருவாக ஏற்றுக் கொள்ளு தல். மெய்கொளவருளி' என்பதே இளம்பூரணர் கொண்ட பாடம். மெய்கொள

வருளிய' என கச்சினார்க்கினியருரையிற் காணப்படும் பாடம் பொருத்த முடைய

தாகத் தோன்றவில்லை.

2. பன்னல் சான்றவாயில்' என்பதற்கு வேதத்தை ஆராய்தல் அமைந்த அக்தனர்' எனப்பொருள் கொள்வர் கச்சினார்க்கினியர். கற்பியலிற் கூறப்படும் வாயில்களுள் பார்ப்பார் குறிக்கப்பட்டனரேயன்றி அந்தணர் என்போர் குறிக்கப்பெற். றிலர். தலைவி கருப்பமுற்ற காலத்துத் தலைவன் அந்தணருடன் கூடிச் சடங்கு செய்தான் என்பதற்கு கசசினார்க்கினியர் காட்டிய பாடல் சங்கத்தொகை நூல்களில் இல்லாத புதிய பாடலாகும். எனவே "பன்னல் சான்றவாயில் ஆவது, நீ என் செய் தனை? என ஆராய்தலிற் பொருந்திய தோழி என்க' என இளம்பூரணர் கடறிய பொருளே தொல்காப்பியன்ார் கருத்துக்குப் பொருத்தமுடையதாதல் நன்கு துணியப் படும்:

3. உவந்தனரெனவும் என்றிருத்தல் பொருந்தும்,