பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா க. &r re

கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப் பகுதியின் நீங்கிய தகுதிக் கண்ணுங் கொடுமை ஒழுக்கங் கோடல் வேண்டி அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக் காதல் எங்கையர் காணின் நன்றென மாதர் சான்ற வகையின் கண்ணுந் தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை உள்ளிய வழியுந் தன்வயிற் சிறப்பினு மவன்வயிற் பிரிப்பினும் இன்னாத் தொல்சூள் எடுத்தற் கண்ணுங் காமக் கிழத்தி நலம்பா ராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும் கொடுமை யொழுக்கத்துத் தோழிக் குரியவை வடுவறு சிறப்பிற் கற்பிற் றிரியாமைக் காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் ஆவயின் வருஉம் பல்வேறு நிலையினும் வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇக் கிழவோள் செப்பல் கிழவ தென்ப.

இளம்பூரணம்:- என் . எனின் கற்பின்கண் தலைவிகூற்று திகழும் இடம் தொகுத் துணர்த்துதல் துதலிற்று.

(இ - ள்.} ஏற்றல் முதலாக வாயிலின் வரூஉம் வகையொடு கூடத் தலைவி கூறல் உரியதாகும் என்றவாறு.

அவனறி வாற்ற அறியு மாகலின்" ஏற்றற் கண்ணும் என் பது-தலைவனது நினைவைத் தலைவி மிக அறியுமாகலின் அவனை யுயர்த்துக் கூறுதற்கண்ணும் தலைவி கூற்று நிகழும்,

'நின்ற சொல்லர்.....செய்பறி யலரே." (நற்றிணை. க) என வரும்.

1. சிறைப்பினும். பா. வே. 2. கிழத்தியர், பா. வே. 3. ஒழுக்கம். பா.வே.

4. ஆற்ற அறிதல்-மிகவும் கன்றாக அறிதல். ஏற்றல்-எதிசேத்தல்: உயர்த்துக்கூறல் என்னும் பொருளில் இங்கு ஆளப்பெற்றது.