பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா சு எக

பாணன் முதலானோர்க்கு வாயில் நேர்ந்தது. வந்தவழிக் காண்க .

கொடுமை யொழுக்கங் கோடல் வேண்டி யடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக் காத லெங்கையர் காணின் நன்றென மாதர் சான்ற வகையின் கண்ணும் என்பது-தலைவனது கொடுமை யொழுக்கத்தினைத் தலைவியே பொறுக்கவேண்டி அவளடிமேல் வீழ்ந்தவனை நெருங்கி நின்மாட்டுக் காதலையுடைய எங்கையர் காணின் இப்பணிதல் நன்றா மெனக் காதலமைந்த வகையின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

நில்லாங்கு நில்லா' என்னும் மருதக்கலியுள்,

'நல்லாய், பொய்யெல்லாம் ஏற்றித் தவறு தலைப்பெய்து

கையொடு கண்டாய் பிழைத்தேன்; அருளினி; அருளுகம் யாம்.யாரே மெல்லா தெருள அளித்து பண்ணிய பூழெல்லா மின்னும் விளித்துநின் பாணனோ டாடி யளித்தி விடலை நீ நீத்தலின் நோய்பெரி தேய்க்கும் நடலைப்பட் டெல்லா நின்பூழ்.' (கலித். கடு)

இதனுள் கையொடு கண்டை பிழைத்தேனருள்' என அடிமேல் வீழ்ந்தவாறும், அருளுகம் யாம் யாரேம்' எனக் காதலமைந்தவாறும் 'நீ நீக்கலின் நின் பூழெல்லாம் நடலைப்பட்டு நோய்பெரிதேய்க்கும் அவற்றை யின்னும் விளித்து நின் பாணனோடாடி யளித்துவிடும் எனவும், இப் பணிதல் நின் பெண்டிர்க்கு நன்றாகுமே எனவும் கூறியவாறு காண்க. ஈண்டுப் பூழ் என்றது குறிப்பினாற் பரத்தையரை.

தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை உள்ளியவழியும் என்பது-தாயரைக் கிட்டிய நல்ல அணியை

1. கோடல் வேண்டி-பொறுத்துக் கொள்ளுதல் வேண்டி.

2, என் தங்கையர் கிலையில் வைத்து கின்னாற் காதலிக்கப்படும் பரத்தை பர்கள் கீ என்னை வணங்குதலாகிய இங்கிகழ்ச்சியைக் காண நேர்ந்தால் இது தினக்கு கன்மையைத்தராது’ என்பாள், ‘காதல் எங்கையர் காணின் கன்று' என் தாள், இத்தொடரில் 'கன்று' என்பது 'கன்றாகாது’ எனக்குறிப்பிற் பொருள் தந்து

கின்றது.