பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் آئینہ صلى الله عليه وسلم

அகரா முகத்த ளாகித் தயரோர் அன்னள் வைகறை யானே’’ {குறுந் 312;

என வரும்.

வேளா ணெதிரும் விருப்பின் கண்ணும் என்பது தலைவி உபகாரம் எதிர்ப்பட்ட விருப்பின் கண்ணும் கூற்றுநிகழும் என்றவாறு.

அது, குறிவழிக்கண்டு கூறுதல். அல்வழித் தலைவிக்குக் கூறிய செய்யுள்:

  • சிலம்புகமழ் காந்தள் நறுங்குலை 1:ன்ன

தலம்பெறு கையினென் கண் புதைத் தோயே பாயல் இன்துணை யாகிய பனைத்தோள் தோகை மாட்சிய மடந்தை தீய ைதுளரோஎன் நெஞ்சமர்த் தோரே. (ஐங்குறு. 293)

இது தலைவி கண்புதைத்தவழித் தலைவன் கூறியது.

தாளாண் எதிரும் பிரிவி னானும்’ என்பது-தாளாண்மை எதிரும் பிரிவின் கண்ணும் என்றவாறு. எனவே நெட்டாறு சேறலன்றி அன்னிலைக்கண் பிரிவென்று கொள்க.

நாணுநெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும் என்பது - தானந் தலைவி நெஞ்சினை வருத்துதலானே நீக்கி நிறுத்துதற்கண்ணும் என்றவாறு.

அஃது, அலராகும் என்றஞ்சி நீக்குதல். அவ்வழித் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு. அவ்வழி இவ்வாறு கூறுகின்றது, புனைந்துரையென்று கருதிக் கூறுதலும் மெய்யென்று கருதிக் கூறுதலும் உளவாம்.

  • களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்

வெளிப்படுத் தோறும் இனிது’ (குறள், 1045)

இது புனைந்துரையென்று கருதிக் கூறியது.

1. வேளான் எதிரும் விருந்தினானும் என்பது கச்சில:ார்க்கினியர் கொண்ட பாடம், வேளாண் என்றது, விருக்துபசரிப்போரையும், விருந்து என்றது உபசரிக்கப் வெறுவோரையும் குறித்து வழங்கும்பெயர்,

2. தாளாண் திரும் பிரிவு - தாளாண்மையை மேற்கொண்டு பீரியும் பிரிவு.