பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்கம் தொல்காப்பியம்-பொருளதிகாாம்

நச்சினார்க்கினியம்

இஃது உள்ளப்புணர்ச்சிக்கு உரியவாறு மெய்யுறு புணர்ச்சிக்கண்ணும் நிகழுமென்ற நானும் மடனுங் குறிப்பினும் இடத்தினும் வருமெனக் கூறுதலின், அச்சமு நானும்’ (தொல். பொ. 99) என்பதற்குப் புறநடையாயிற்று. இதனை ஈண்டுக் கூறினான், இடத்தின்கண் வரும் நானும் மடனுந் தந்தன்மை திரிந்துவருமென்பது உம், அது கூற்றின்கண் வருமென்பது உங் கூற்றுநிகழ்கின்ற இவ்விடத்தே கூறவேண்டுதலின், எனவே, இதுமுதலிய சூத்திரம் மூன்றும் முன்னர்த் தலைவிக்குக் கூற்று நிகழுமென்றற்குக், கூற்று நிகழுங்கால் நானும் மடனும் நீங்கக் கூறும் என்று அக் கூற்றிற்கு இலக்கணங் கூறினவேயாயிற்று.

(இ - ள்.) அவள்வயின் ஆன நானும் மடனும் பெண்மைய ஆதலின்-தலைவியிடத்து உளவாகிய நானும் மடனும் பெண்மைப் பருவத்தே தோன்றுதலையுடையவாதலின்; காமத்திணையிற் கண்ணின்று குறிப்பினும் வருஉம் - அப் பருவத்தே தோன்றிய காம. வொழுக்கங் காரணமாக அவை கண்ணின்கணின்று குறிப்பினும் வரும்; வேட்கை நெறிப்பட இடத்தினும் வருஉம் - அன்றி வேட்கை தன்றன்மை திரியாது வழிப்படுதலாலே கரும நிகழ்ச்சிக்கண்ணும் வரும்; அல்லது வாரா - அவ்வீரிடத்துமல்லது அவை வாரா (எ-று.)" இயற்கைப் புணர்ச்சிக்கண் உரியவாகக் கூறும் பன்னிரண்டு மெய்ப்பாட்டானுங் குறிப்பின்கண் நானும் மடனும் நிகழ்ந்தவா றுணர்க. -

"ஒருநெறிப் பட்டாங் கோரியன் முடியுங்

கரும நிகழ்ச்சி யிடமென மொழிய’’ (தொல்-பொ.செய். 198)

என்னுஞ் செய்யுளியற் குத்திரத்தான் இடமென்றதனைக் கரும நிகழ்ச்சி என்றுணர்க:

1. தன்தன்மை திரிதலாவது தலைவி தனது வேட்கையினைக் கண்ணின் குறிப்

பினால் அன்றிக் கூற்றினால் வெளிப்படுத்தித் தோழிக்கு உரைத்தலை.

2. இந்நூற்பாவிற்கு இளம்பூரணர் கூறிய பொருளே ஆசிரியர் கருத்தினைத் தெளிவாக விளக்குவதாகும்.

3. இங்கு இடன் என்றது கரும நிகழ்ச்சியினைச் சுட்டாது கரும கிகழ்ச்சிக்கு

ஏதுவாகிய மெய்ப்பாட்டினை ச் சுட்டியது எனக் கொள்ளுதல் பொருத்தமாகும்.

காணும் மடனும்,நீங்கத் தலைவி கூற்று நிகழ்த்துவாள் என்பதற்கு இந்நூற்பாவில் இட: மில்லை.