பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}

தொல்காப்பியம்-பொருளதிகாரம்

வேண்டாப் பிரிவினும் என்பது . புணர்ச்சி வேண்டாது பிரிவு வேண்டினும் என்றவாறு

இது தலைவன் நெஞ்சினாற் பிரியானென்பதனான் வேண்டாப் பிரிவென்றார். அது தாளா...வென்பது அலராகுமென்று அஞ்சி ஒரு வழித் தணத்தலும் ஒன்று அவ்வழித் தலைவிக்கு உரைத்தனவும் தலைவற் குரைத்தனவும் உளவாம்.

வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தினும் என்பதுவேளாண்மையாவது உபகாரம். பெருநெறியாவது உபகாரமாகிய பெரு நெறி என்க. அதனைத் தோழி தலைவனை வேண்டிக் கோடற் கண்ணும் என்றவாறு, - -

இதனாற் பயன் இல்லறம் நடத்தல்வேண்டும் என்பது.

புணர்ந்துழி யுணர்ந்த அறிமடச் சிறப்பினும் என்பது-தலை வனொ 5 தலைவி புணர்ந்தவழி ஆண்டுப் பொருந்திய அறிவுமடம்பட்ட சிறப்பின் கண்ணும் என்றவாறு -

அஃதாவது அல்ல.குறிப்படுதல். அவ்வழியும் தோழி கூற்று நிகழும்.

ஓம் படைக் கிளவிப் பாங்கின் கண்ணும் என்பது-ஒம்படுத்துதற் பொருட் பகுதிக்கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு.

அஃதாவது ஒருவழித்தனக்கும் வழி ஒம்படை கூறுதல். இதனுள் கிளிகடிய யாம் வாரேம் நிமறவா தொழிதல்வேண்டு மென்றவாறு.

செங்கடு மொழியாற் சிதைவுடைத்தாயினு மென்பு நெகப் பிரிந்தோன் வழிச்சென்று கடைஇ அன்புதலை யடுத்த வன்புறைக் கண்ணும் என்பது-செவ்விய கடிய சொல்லினானே தலைவன் அன்பு சிதை வுடைத்தாயினும் என்புருகுமாறு பிரியப்பட்டவளிடத்துச் சென்று

1. வேண்டாப் பிரிவு என்றது, களவொழுக்கம் அலாரம் என்று கருதிப் பிரிதலை வேண்டுதல். இஃது ஒருவழித் தணத்தல் எனப்படும்.