பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உச --

யுடையன் போலும் எனவும், அருளுவார்க்கு இஃது இடமெனவும், அவன் குறைமறுப்பின் மடலேறுவல் எனக் கூறிப் போந்தான் பின்பு வரக்கண்டிலேன் எனவும், இந் நிகான கூறுதல்.

நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தினும் என்பது-தலைவி குறை நயந்தமை பெற்றவழி அத் தலைவி நயம்பொருந்தும் இடத்தினுங் கூற்று நிகழும் என்றவாறு. -

இன்னும் நயம்புரி யிடத்தும் என்றதனால் களவொழுக்கம் நிகழ நின்று.ழிக் கூறுங் கூற்றும் ஈண்டே கொள்க. அது தலைவன் வருமெனவும் வந்தா னெனவுங் கூறுதலும் தலைமகன் பகற்குறிக்கண் நீங்கிய வழிக் கூறுதலும் எனப் பலவாம்.

எண்ணரும் பன்னகை கண்ணிய வகையினும் என்பது-எண்ணு தற்கு அரிய பல நகையாட்டுக்களைத் தலைவனிடம் குறித்த வகையுங் கூற்று நிகழும் என்றவாறு.

அஃது அலராகுமென்று கூறுதல். இவ்வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாயினால் அவர் துற்றி நகைப்பராகலின் நகையாயிற்று.

புணர்ச்சி வேண்டினும் என்பது-மேற்சொல்லப்பட்ட பல்லாற். றானும் தலைவற்கறிவுறுத்தவழிப் பின்னும் புணர்ச்சி வேண்டினும் ஆண்டுத் தோழி கூற்று நிகழும் என்றவாறு.

இது பின்னும் புணர்ச்சி வேண்டிய தலைவற்கு இடமுணர்த்தியது. இரவு வருவானைப் பகல் வாவென்றலும் பகல் வருவானை இரவு வாவென்றலுங் குறிபெயர்த்தலும் எல்லாம் ஈண்டே கொள்க,

இது பகற்குறி நேர்ந்தது. ஆண்டுத் தலைவிக்குக் கூறுமாறு:

'ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன்

சிறுகட் பெருங்களிறு வயப்புலி தாக்கித் தொல் முரண் சோருந் துன்னருஞ் சோலை நடுநாள் வருதலும் வரூஉம் வடுதா னலமே தோழி நா மே’’ (குறுந். 88)

என வரும்,