பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமல் தொல்காப்பியம்-பொருளதிகாரம்

வேண்டியவழிக் கூறல், வேளாண் பெருநெறி வேண்டிக் கூறல், அல்ல.குறிப்பட்டவழிக் கூறல், ஒம்படை கூறல், இயற் பழி த் து வற்புறுத்தல், ஆறின்னாமை கூறல், காப்பு மிகுதி கூறல், காதல் மிகுதிகூறல், அவன்வயிற் றோன்றிய கிளவி, ஐயச்செய்கை, தாய்க் கெதிர் மறுத்தல், குறிபார்த்தல் விலக்கல், வெறிவிலக்கல், பிறன் வரைவு மறுப்பித்தல், அவன் வரைவுடம்படுத்தல், வரைவுடம் பட்டமை தலைவற்குக் கூறல், உடம்பட்டமை தலைவிக்குக் கூறி வற்புறுத்தல் என இவை.

தாங்கருஞ் சிறப்பிற் றோழி மேன என்பது - இவை முப்பத் திரண்டு பொருண்மையும் தலைவிக்கு இன்றியமையாத தோழி மேலன என்றவாறு : (2.2)

நச்சினார்க்கினியம்

இது முறையானே தோழி கூற்று நிகழும் இடம் பலவுத் தொகுத்துக் கூறுகின்றது.

(இ-ஸ்.) நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் செய் வினை மறைப்பும் செலவும் பயில்வும் - தலைவன் பெட்ட வாயில் பெற்று இரவுவலியுற்று முன்னுறு புணர்ச்சியை உரைப்பின் இன்னது நிகழுமென்று அறியாது அஞ்சிக் கரந்து மதியுடம் படுப்பத் தோழி மதியுடம்படுங்கால் அவள் ஆராயும் ஆராய்ச்சியெல்லாம் நாட்டமாம்; அஃது எட்டாம். அவற்றுள் முன்னுறு புணர்ச்சியை உணர்தற்குக் காரணம் எழுவகைய. இவை நாற்ற முதலிய ஏழும்:

நாற்றமாவது, ஒதியும் துதலும் பேதைப் பருவத்துத் தக நாறாது தலைவன் கூட்டத்தான் மான் மதச்சாந்து முதலியனவும் பல பூக்களும் விரவி நாறுதல்.

தோற்றமாவது, நீண்டும் பிறழ்ந்தும் பிள்ளைப்பருவத்து வெள்ளை நோக்கின்றி உள்ளொன்று கொள்ள நோக்குங் கண்ணுந், தந்நிலை திரிந்து துணைத்து மெல்கிப் பணைத்துக் காட்டுந் தோளும் முலையுமென்று இன்னோரன்ன.

ஒழுக்கமாவது, பண்ணையாயத்தோடு முற்றிலான் மணற் கொழித்துச் சோறமைத்தன் முதலியன முனிந்த குறிப்பினளாய்ப் பெண்டன்மைக்கு ஏற்ப ஒழுகுதல்.