பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா உசு உங்டு

தோழியின் முடியுமிடத்து ஓரிடத்து உண்டு என்றவாறு. * அன்பொடு புணர்ந்த வைந்திணை' (இறையனார் களவியல்-க) என்றதனால் யாண்டும் உள்ளப் புணர்ச்சியான் வேட்கைமீ தூர்ந்த வழியே தோழியின் முடியப் பெறுவது என்று கொள்க. ' அல்லாக்காற் பெருந்திணைப்பாற்படும்.” (ங்க) நச்சினார்க்கிணியம்

இது தோழிக்குங் களஞ்சுட்டுக் கிளவி உரித்தென்று எய் தாதது எய்துவித்தது. ,

(இள்ை.) களஞ்சுட்டுக் கிளவி தலைவி குறிப்பால் தோழி கூறுதலன்றித் தானே யுங் கூறப்பெறும் ஒரோவழி என்றவாறு . தோழி குறித்த இட முந் தலைவி தான் சேறற்குரிய இடமா

மென்பது கருத்து.'

  • வண்டுபட

விரிந்த செருந்தி வெண்மணன் முடுக்கர்ப் பூவேய் புன்னையந் தண்பொழில்

வாவே தெய்ய மணந்தனை செலற்கே’’ (அகம் 240) எனத் தோழி களஞ்சுட்டியவாறும் காண்க. {l ໖) ஆய்வுரை

இது, தோழியிற் கூட்டத்திற்குரியதோர் சிறப்பு விதி கூறுகின்றது.

(இ-ள்.) தோழியாற் குறியிடம் அறிவிக்கப்பட்டுப் பொருந்து மிடமும் உண்டு எ. று,

__e முக்கா ளல்லது துணையின்று கழியாது

அக்கா ளகத்தும் அதுவரை வின்றே. இளம்பூரணம்

இது, பாங்கற் கூட்டம் நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று.

1. இயற்கைப் புனர் ச்சியில் எதிர்ப்பட்டு உள்ளப்புணர்ச்சியளவில் கின்ற தலைவன் தலைவி இருவர்க்கும் மெய்யறு புணர்ச்சி தோழியினால் முடியும் இடனும் உண்டு .

2. தலைமகளொடு உள்ளப் புணர்ச்சி பெறாதான் தோழியின் துணை பெற்று அவளைக் கூட முயல்வது பெருக்தினையாகிய பொருந்தா ஒழுக்கமாம் என்பது கருத்து.

3. தோழி சுட்டிய இடமும் தலைவி செல்லுதற்குரிய இடமாதலால் தலைவி யுடன் ஒத்த உணர்வினளாகி தோழிக்கும் களஞ் சுட்டுக் கிளவி உரியதாகும்

என்கின்றது இந்நூற்பா,