பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொல்காப்பியம்-பொருளதிகாரம்

தலைவன் செய்த அடையாளங்களாக எண்ணிக் குறியிடத்தே சென்று தலைவனைக் காணப் பெறாது அல்ல குறிப்பட்டு மீளுதலும் தலைமகட்கு உரியதாகும் என்பது இந்நூற்பாவினால் உணர்த்தப்

படும் செய்தியாகும்.

அல் குறிப்படுதலும் அவ்வயின் உரித்தே அவன்வர வறியும் குறிப்பி னான” (க எ)

எனவரும் இறையனார் களவியல் இத்தொல்காப்பிய நூற்பாவை

அடியொற்றிய ைந்ேதமை காண்க.

- அ ங்காங் கொழுகும் ஒழுக்கமும் உண்டே

ஓங்கிய சிறப்பின் ஒருசிறை யான.

இளம்பூரணம்

(இ - ள்.) அவ்வவ்விடத் தொழுகும் ஒழுக்கமுந் தலைவி மாட்டு உண்டு, ஓங்கிய சிறப்பினையுடைய ஒருபக்கத்து என்றவாறு.

ஒருசிறை யென்றது மனத்தானும் மொழியானும் மெய்யானும் கற்புடை மகளிர் ஒழுகும் ஒழுக்கத்தின் மனத்தான் ஒழுகும் ஒழுக்கமும் உண்டு என்றவாறு, ! (சச) ஆக்சினார்க்கினிகம்

இது தலைவனும் அல்ல.குறியால் வருந்துவனென்கின்றது.

(இ - ள். ஓங்கிய சிறப்பின் தனது மிக்க தலைமைப் பாட்டினாலே பொழு தறிந்து வாராமையின்; ஒருசிறை ஆன ஆங்குதான் குறிசெய்வதோரிடத்தே தன்னானன்றி இயற்கையான் உண்டான அவ்வல்ல குறியிடத்தே ; ஆங்கு ஒழுகும் ஒழுக்கமும் உண்டு - தலைவியுந் தோழியுந் துன்புறுமாறு போலத் தலைவனுந் துன்புற்று ஒழுகும் ஒழுக்கமும் உண்டு எ - று."

1. இங்கு ஒரு சிறை என்றது, கற்புடைமகளிர்க்குரிய மன மொழி மெய். களானாகிய ஒழுகலாறுகளுள் மனத் தான் ஒழுகும் ஒழுக்கத்தினைக் குறித்த து என்பது இளம்பூரணர் கருத்தாகும்.

2. இந் நூற்பாவிற்கு ச் சினார்க்கினியர் எழுதிய உரை தொல்காப்பியர் கருத்தினை அறியவொட்டாது தமது கருத்தினை ஏற்றியுரைக்கும் வகையில் வலிந்து எழுதப்பட்டதாகும். குடங்கொண்டாள் வீழ்ந்தாள்’ என்புழி குடமும் வீழ்ந்த துஎன்பது பெறப்படுமாறு போல, அல்ல குறிப்படுதலும் அவன் வயின்