பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா நில் స్త్రీ థౌజ్తో

ஆய்வுரை

இது, களவு வெளிப்படுதற்குக் காரணமாவார் இவர் என்பது உணர்த்துகின்றது.

(இவள்.) இரவினும் பகலினும் வந்துசெல்லும் தலைவனைக் கண்டு புலப்படுத்தும் அம்பலும், இன்னானோடு இன்னாளிடையது நட்பு எனச் சொல்லால் விரித்துரைப்பதாகிய அலரும் காதலர் இருவரது களவொழுக்கத்தினைப் பலரும் அறிய வெளிப்படுத்தலால் அத்தகைய களவு வெளிப்படுதற்குக் காரணமாவான் தலைவனே sr - Noj.

அம்பல்-அரும்பல்; மகளிரது முகக் குறிப்பினால் களவொழுக்கம் அரும்பு போன்று சிறிது வெளிப்புடுதல்: அலர்-அலர்போன்று கூற்றினால் விரிந்து வெளிப்படுதல். அங்கு அதன் முதல்வன். அந்நிலையில் அக்களவின் வெளிப்பாட்டிற்குக் காரணமாவான். முதல்-காரணம். அம்பலும் அலரும் தோன்றிய பின்னரல்லது இம். மறைவெளிப்படாதாதலின், இக்களவு வெளிப்பாட்டிற்குத் தலைவனே காரணமாவான் என்பது கருத்து.

  • அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின்'

என வரும் இத் தொல்காப்பியத் தொடரை,

'அம்பலும் அலருங் களவு' (22) எனவும் ,

'வெளிப்பட்ட பின்றையும் உரியகிளவி (23) எனவும் இரண்டு சூத்திரங்களாக இறையனார் களவியலாசிரியர் அமைத்துக் கொண்டுள்ளார்.

டு?), வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று

ஆயிரண் டென்ப வரைதல் ஆறே. இளம்பூரணம்

இது, வரையும் பகுதி உணர்த்துதல் துதலிற்று.

(இ - ள்.) களவு வெளிப்பட்டபின் வரைதலும் களவு வெளிப்படாமை வரைதலும் என அவ்விரண்டென்று சொல்லுவர் வரையும் நெறி என்றவாறு.*

1. வெளிப்பட களவு வெளிப்பட்ட நிலையில், படாமை வெளிப்படாத

கிலையில் வரைதல், ஆறு மணந்துகொள்ளும் கெறி,