பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா ச 序_母

(இ-ள்) வண்டே-பயின்றதன் மேலல்லது செல்லாத தாது ஊதும் வண்டு; இழையே-ஒருவரால் இழைக்கப்பட்ட அணிகலன்கள்; வள்ளி-முலையினுந் தோளினும் எழுதுந் தொய்யிற்கொடி, பூவேகைக்கொண்டு மோந்து உயிர்க்கும் கழுநீர்ப்பூ, கண்ணே - வான் கண்ணல்லாத ஊன் கண்: அ ல ம ர ல் - கண்டறியாத வடிவுகண்ட அச்சத்தாற் பிறந்த தடுமாற்றம்; இமைப்பே - அக் கண்ணின் இதழ் இமைத்தல்; அச்சம்.ஆண்மகனைக் கண்டுழி மனத்திற் பிறக்கும் அச்சம்; என்று அன்னவை பிறவும் - என்று அவ்வெண்வகைப் பொருளும் அவைபோல்வன பிறவும்; அவண் நிகழ நின்றவை-அவ்வெதிர்ப் பாட்டின்கண் முன்பு கண்ட வரையரமகள் முதலிய பிழம்பு களாய் ஈண்டுத் தன் மனத்து நிகழ நின்ற அப் பிழம்புகளை ஆங்குக் களையும் கருவி என்ப முந்துநூற்கண்ணே அவ் வையம் நீக்குங் கருவியாமென்று கூறுவர் ஆசிரியர் (எ - று): -

எனவே, எனக்கும் அது கருத்தென்றார். இவையெல்லாம் மக்கட்குரியனவாய் நிகழவே தெய்வப் பகுதிமேற் சென்ற ஐயம் நீங்கித் துணியும் உள்ளம் பிற த் த லின் துணி வும் உடன் கூறிற்றே யாயிற்று."

இனி, அன்னபிற ஆவன கால் நிலந்தோய்தலும் நிழலிடும் வியர்த்தலும் முதலியன.

'திருதுதல் வேரரும்புந் தேங்கோதை வாடும் இருநிலஞ் சேவடியுந் தோயும்-அரிபரந்த போகிதழ் உண்கணு மிமைக்கும் ஆகு மற்றிவள் அகலிடத் தணங்கே”

. (புற.வெ.மாலை. கைக்.3) என வரும். :

1. அ வண், வண்டு, இழை, வள்ளி, பூ, கண், அலமரல், இமைப்பு, அச்சம் என்று அன்னவை பிறவும் அவண் நிகழகின்றவை ஆங்குக் களையும் கருவி. என் என இயைத்துப் பொருள் வரையப்பட்டது. அவண் கிகழகின்றவை என்றது தலைமகளை எதிர்ப்பட்டுக் கண்டநிலையில், தலைவன் தான் முன்பு கண்ட வரையரமகள் முதலிய வடிவுகளாய்த் தன் மனத்து நிகழ நின்ற ஐயத்தோற்றங்களை. அவ் ஐயத்தினை நீக்கும் கருவி, வண்டு, முதலாகச் சொல்லப்பட்ட எண்வகைப் பொருளும் கால் கிலங்தோய்தல், நிழலிடுதல், உடல் வியர்த்தல் முதலாக அவை போல்வன பிறவுமாம் என்றவாறு.

2. ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப' என்பதனாற் காட்சியும், சிறந்துழி ஐயம் சிறந்ததென்ப' என்பதனால் ஐயமும், இக் நூற்பாவால் ஐயம் நீங்கித் துணி தலாகிய துணிவும் முறையே கூறப்பட்டமை காணலாம்.