பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

斑袋。 தொல்காப்பியம்-பொருளதிகாரம்

இக் காட்சி முதலிய நான்கும் அகனைந்திணைக்குச் சிறப் புடைமையும் இவை கைக்கிளையாமாறும் முன்னைய நான்கும். தொல்-பொ-52) என்புழிக் கூறினாம். இங்ங்ணம் ஐயந்தீர்ந்துழித் தலைவியை வியந்து கூறுதலுங் கொள்க. ' (+}

ஆய்வுரை -

இது, தலைமகனுள்ளத்து ஐயம் நீங்கித் துணிதற்குரிய கருவி கூறுகின்றது. ...” -

(இ-ள்) தலைமகள் கூந்தலில் அணிந்த மாலையில் மொய்த்த வண்டுகளும், அவளணிந்த அணிகலன்களும், மேனியிற் கோலம் செய்யப்பெற்ற வள்ளிக் கொடியும், நறுமலரும், கண்ணிமைத்தலும், தடுமாற்றமும், அச்சமும் அத்தன்மைய பிறவும் (தலைமகனுள்ளத்தே தோன்றிய) ஐயத்தினைக் களைதற்குரிய கருவியாகும் எறு.

டு. 'காட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக்

கூட்டி உரைக்குங் குறிப்புரை யாகும்.

இளம்பூரணம்

என்.எனின் மேல் தலைமகளை இத்தன்மையள் எனத் துணிந்த தலைமகன் குறிப்பறியாது சாரலுறின் பெருந்திணைப்பாற்படு மாகலானும் இக் கந்திருவநெறிக்கு ஒத்த உள்ளத்தாராதல் வேண்டு மாதலானும், ஆண்டு ஒருவரோடொருவர் சொல்லாடுதல் மரபன்மை யானும், அவருள்ளக் கருத்தறிதல் வேண்டுதலின், அதற்குக் கருவி யாய உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்) நாட்டம் இரண்டும் என்பது-தலைமகன் கண்ணும் தலைமகள் கண்ணும் என்றவாறு :

1. காட்டம்.ாடுதல்; ஆராய்ந்து காணுதல். இச்சொல் கண்டு நாடிச் கர்ண்டற்குக் கருவியாகிய கண் என்னும் பொருளில் ஆளப்பெற்றது. பிறரது வள்ளக்குறிப்பினைத் தாம் காடிக் காண்டற்கும் தமது உள்ளக் குறிப்பினை பிறர் காடிக்கண்டுணர்தற்கும் கருவியாக அமைந்தவை கண்களாதலின் நாட்ட என்பது கண்ணிற்குக் காரணப் பெயராயிற்று. காட்டம் இரண்டும் என்பு இனைத்தென எறிந்த சினைக்கிளவிக்குரிய உம்மையொடு தொடர்ந்த இரண்டும் ன்ைனுங் தொகைச் சொல், தலைவன் தலைவி என்னும் இருவர் கண்களை யு. தனித்தனியே குறிக்கும் முறையிற் பொதுப்பட அமைந்திருத்தலால் 'காட் ட இரண்டும் என்பது, தலைமகன்கண்ணும் தலைமகள் கண்ணும் என்றவாறு என்று உரை வரைந்தார் இளம்பூரணர்.