பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

പ്പ് தொல்காப்பியம் - பொருளதிகாரம்

'மதியும் மடந்தை முகனும் அறியா

பதியிற் கலங்கிய மீன்.” (குறள். 1116)

இஃது இரவுக்குறிக்கண் தலைவன் அவட்பெற்று மலிந்தது.

'மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி” (குறள். 1118)

என்பதும் அது.

ஆற்றிடை உறுதலும்-தான்சேறும் ஆற்றிடை இடையூறு உண்டாய விடத்தும் கூற்று நிகழும், இரட்டுற மொழிவான் வரைவிடை வைத்துப் பிரிந்தான், தான் சேறும் ஆற்றின்கண் வருத்தமுற்றுக் கூறலும் கொள்ளப்படும்."

'குருதி வேட்கை உருகெழு வயமான்

வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கும் மரம்பயில் சோலை மலியப் பூழியர் உருவத் துருவின் நாள்மேயல் ஆரும் மாரி எண்கின் மலைச்சுர நீளிடை நீ நயந்து வருதல் எவனெனப் பல புலந்து அழுதனை உறையும் அம்மா அரிவை பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப் பூதம் புணர்த்த புதிதியல் பாவை விரிகதிர் இளவெயில் தோன்றி அன்ன நின் ஆய்நலம் உள்ளி வரினெமக்கு ஏமம் ஆகும் மலைமுதல் ஆறே” (நற்றிணை, 192)

இந் நற்றிணைப்பாட்டு தலைவி ஆற்றினது அருமை செப்பத் தலைவன் செப்பியது.

'ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின்

துரங்குதோல் கடுக்குந் துரவெள் ளருவிக்

1. ஆற்றிடையுறுதலும் - தலைமகன் மேற்சொல்லப்பட்ட மட்ன்மா கறு தல் தடைப்படுதலு என முன் வரைக் த பொழிப்புரைக்கும் 'தான் சேறும் ஆற்றிடை, இடையூறு உண்டாய விடித்தும்' எனப் பின்வரும் பதிவுன்ர விளக்கத்திற்கும் வேறுபாடுண்மை கோக்குக. அவ்வினை என்றது தோழியிற் கூட்டத்தை.