பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறையுடைப் பேச்சு 123 செய்தோம். அங்ங்ணமிருக்க, இரவில் கான் மட்டிலும் படுக்கையில் ர்ே சொரியும் கண்களுடனும் மெலிந்த தோள்களுடனும் இருப் பதற்குக் காரணம் என்னவோ?’ என்று கூறும் வாயிலாக இச்செய்தியைப் புலப்படுத்துகின்றாள். இதனைக் கபிலர் என்ற புலவர் அமைத்த சொல்லோவியம் இது: - ஆடமை குயின்ற அவிர்துளை மருங்கில் கோடை யவ்வளி குழலிசை யாகப் பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத் தோடமை முழவின் துதைகுர லாகத் கனக்கலை இகுக்கும் கடுங்குரல் துரம்பொடு மலைப்பூஞ் சாரல் வண்டியா ழாக இன்பல் இமிழிசை கேட்டுக் கலிசிறந்து மந்தி கல்லவை மருள்வன நோக்கக் கழைவளர் அடுக்கத் தியலியா டும்.மயில் கனவுப்புகு விறலியில் தோன்றும் நாடன் உருவ வல்வில் பற்றி அம்புதெரிந்து செருச்செப் பானை சென்னெறி வினாஅய் புலர்குரல் எனற் புழையுடை ஒருசிறை மலர்தார் மார்பன் கின்னோற் கண்டோர் பலர்தில் வாழி தோழி அவருள் ஆரிருட் கங்குல் அணையொடு பொருந்தி ஒரியா னாகுவ தெவன்கொல் நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே,8 . (அமை - மூங்கில்; வளி - காற்று: துதை - நெருங்கிய கன . கூட்டமான, இமிழ் - ஒலிக்கும்; கலி - ஆரவாரம், கழை - மூங்கில் இயலி - உலவி: கனவு - கலம்; விறலியில் - விறலி போல; உருவ - அழகிய தெரிந்து . ஆய்ந்து: ஏனல் - திணை, கங்குல் - இரவு) - இதைக் களிறுதரு புணர்ச்சி’ என்று இலக்கண ஆசிரியர்கள் குறிப்பர். இவ்வாறு பூத்தரு புணர்ச்சியாகவும், புனல்தரு புணர்ச்சி யாகவும் தலைவி தோழிக்கு அறத்தொடு கிற்பாள். தோழி புலப்படுத்தும் முறை களவு ஒழுக்கத்திலுள்ள ஒருத்தியின் உடல் வேறுபாட்டைச் செவிலித்தாப் முதலியோர் காண்கின்றனர். அவன் காரணத்தை கெற்குறி பார்ப்பவளைக் கொண்டு ஆராயத் தொடங்குகின்றனர். குறத்தி பாட்டுப் பாடிக் 3. அகம் - 82