பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్లీశ్లే தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை எங்தையும் கிலனுறப் பொறாஅன் சீறடி சிவப்ப எவன் இல குறுமகள் இயங்குதி என்னும்’88 என்ற அகப்பாட்டடிகளில் தோழி தலைவனுக்குத் தலைவியின் இற்செறிப்பை யுணர்த்துங்கால் தந்தையுட் கொண்டு கூறியதைக் காண்க. மேலும், ஆறத்தொடு கின்றேனைக் கண்டு திறப்பட , என்னையர்க் குப்த்துரைத்தாள் பாய்: அவருக் தெரிகணை கோக்கச் சிலைநோக்கிக் கண்சேந்து ஒருபகல் எல்லாம் உருத்தெழுந்து ஆறி இருவர்கட் குற்றமும் இல்லையால் என்று தேருமந்து சாப்த்தார் தலை. அன்ற தலிப்பாட்டடிகளில் தன்னையர் வரைதலுக்கு ஒருவாறு உடன்பட்டமையைத் தோழி தலைவிக்கு உரைத்ததை அறிக. இன்னும்,

ன .; அலர்ளழிச் சேரி கல்லென: ஆனாது அலைக்கும் அறனில் அன்னை."

என்ற குறுந்தொகையடிகளில் தலைவி தலைவனுடன் செல்வதால் ஊரில் அலசெழுதலையும் சேரியில் ஆரவாசம் நிகழ்தலையும் தோழி தலைவிக்குப் புலப்படுத்தலை உணர்க. தலைவனொடும் தலைவியொடும் (அவளைப் பெற்ற) கற்றாய் கூறியதாகக் கூறும் வழக்கமில்லை என்று புலப்படுத்துவர் ஆசிரியர். ஒண்தொடி மாதர் கிழவன் கிழத்தியொடு கண்டோர் மொழிதல் கண்ட தென்ப.38 என்ற நூற்பாவால் இதனை அறியலாம். எனவே, நற்றாப் ஏனை யோரை நோக்கியே கூறுவதாகச் செய்யுள் செய்யப்பெறும் என்பதை அறிதல்வேண்டும். நற்றாப், செவிலி, தோழி என்னும் இவர்களோடும் தலைவ னொடும் தலைவியொடும் வழியிடையே கண்டோர் உரையாடுதல் உலகியல் வழக்கமாகும். எடுத்துக்காட்டாக, - 35. அகம் - 12 36. கலி - 39 (அடி 20 . 25) 37. குறுங் - 262. 38. செய்யு - நூற் 185 (இளம்)