பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii 3. மேற்குறிப்பிட்ட சூழ்நிலையில் தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை" என்ற நூல் வெளிவருகின்றது. இந்நூலின்கண் 34 கட்டுரைகள் அடங்கியுள்ளன; இறுதிக் கட்டுரை நூலின் பெயராக அமைந்தது. இவற்றுள் பத்துக் கட்டுரைகள் 1953, 1954 பாண்டு களில் அமுதசுரபி என்ற திங்கள் இதழ்களில் வெளிவந்தன. ஏனையவை அதன் பின்னர் வெவ்வேறு சமயங்களில் எழுதப் பெற்றன. திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் பணியேற்றபின் (ஆகஸ்டு . 1960) ஒருசில கட்டுரைகள் எழுதப்பெற்றன. பல சமயங்களில் பல கோக்குடன் எழுதப்பெற்றமையான் இவற்றுள் ஆங்காங்கே கூறியது கூறல் காணப்பெறும்; எனினும், அவை விளக்கம்பற்றி வந்தனவாகக் கொள்ளல் பொருந்தும். பல யாண்டு கள் கழிந்து நூல் வடிவமாக வரும் இக்கட்டுரைகள் யாவும் தொல்காப்பியம்-பொருளதிகாரம் பயில்வாருக்கு ஒரு வழித் துணை விளக்கம்போல் அமையும்; ஏனையோருக்கும் தொல்காப்பி யத்தைப்பற்றிய கருத்துகளை எளிதாகப் பெறுவதற்குத் துணை யாக இருக்கும். இக்த நூலைப் பயில்வோர் கவிதை வாழ்க்கையி லிருந்து மலர்ந்தது; அது வாழ்க்கைக்கே உரியது; வாழ்க்கைக் காகவே அது நிலை பெற்றுள்ளது” என்று கவிதையைப்பற்றி ஹட்சன் என்ற மேனாட்டுத் திறனாய்வாளர் கூறிய கருத்து ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்’ என்ற நூலுக்குப் பெரிதும் பொருந்துவதை நன்கு அறிவர். 'அமுதசுரபி'யில் வெளிவந்த கட்டுரைகளை இந்நூலில் சேர்த்து வெளியிட இசைவுதங்த அந்த இதழாசிரியருக்கு என் கன்றி உரியது. பல்லாண்டுகளாகக் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் துறையில் பெரும்பணியாற்றிக் கடக்த இரண்டாண்டு களாகச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து, அத்துறையை அணி செய்யும் டாக்டர் மு. வரதராசனாரைத் தமிழ்கூறு கல்லுலகம் கன்கறியும். கடந்த இருபது பாண்டுகளாக அவரை டான் கன்கு அறிவேன். பழைய பரம்பரைத் தமிழ்ப் புலவர்களையும் புதிய பரம்பரைத் தமிழ்ப் புலவர்களையும் இணைத்து கிற்கும் பெரும்புலவர் அவர். பழமைக்குப் பழமையாப்ப் புதுமைக்குப் புதுமையாய் கின்று அறிவொளி வீசும் ஆசிரியமணியாவார். உழைப்பினால் உயர்க் தமைக்குத் தமிழ் காட்டு இளைஞர்கட்கு எடுத்துக்காட்டாக கின்று கிலவுபவர். இவருடைய எழுத்துகளில் புலமை மணம் 4. Hudson, W.H. : An introduction to the study of literature-pp-92.