பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a* . 75. இல்லறவொழுக்கம் திலைவனும் தலைவியும் பல்லோர் அறியத் திருமணம் புரிந்துகொண்டு வாழ்க்கை நடத்துதலே இல்லறவொழுக்கம் என்று: ஆன்றோர் குறிப்பிட்டுள்ளனர். ஆசிரியர் தொல்காப்பியர் கற்பு அல்லது இல்லறவொழுக்கத்தை, மறைவெளிப் படுதலும் தமரிற் பெறுதலும் இவைமுத லாகிய இயல்கெறி பிழையாது மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும் பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே." என்று குறிப்பர். களவு வெளிப்பட்ட பின் தமர் கொடுப்பக் கொள்ளும் மணவின்ை கிறைவேறியபின் மலிவு, புலவி, ஊடல், உணர்வு, பிரிவு ஆகிய ஐக்து கூறுகளும் அடங்கிய பகுதியே கற்பென வழங்கப்பெறுவது, கற்பு என்பதுதான் இல்லறவொழுக்க மாகும். தொல்காப்பியத்தில் கற்பு’ என்று வரும் இடங்களை யெல்லாம் ஆராயின் அது இல்லறம்" என்ற பொருளையே குறித் தல் அறியலாம். கற்பு என்பதற்கு மகளிர்க்கு மாந்தர்மாட்டு கிகழும் மன நிகழ்ச்சி என்று இளம்பூரணரும், தன் கணவனைத் தெய்வமென்று உணர்வதொரு மேற்கோள்’ என்று கச்சினார்க் கினியரும் கூறுவர். இனி, ஆசிரியர் இல்லறவொழுக்கத்தில் கூறும் பகுதிகளை கோக்குவோம். முதலாவது மலிவு மலிவு என்பது இல்லொழுக்கமும் புணர்ச்சிபும் முதலாய வற்றால் மகிழ்தல். அஃதாவது களவு முற்றி மணந்துகொண்ட காதலர் மனக்குறை திரக் கூடிக் கலந்து இன்புற்று வாழ்தல். மலிவு-மகிழ்ச்சி. இம்மலிவுக் காலத்தே தலைவனும் தலைவியும் களவுக்காலத்தே கிகழ்ந்தவற்றை ஒருவர் மற்றவரோடு கூறி இன்புறுவர். இப்பகுதியில் நிகழும் செய்திகளைத் தொல்காப்பியர் "கரணத்தின் அமைந்து முடிக்ககாலை’ என்ற கற்பியல் நூற்பா செய்யுள் நூற். 179 (இளம்) 3. அகத்தினை-நூற்பா 44 களவியல்.நூற்ப 1, 23, 51, கற்பியல்-நூற்பா 1, 11, 21 பொருளியல்.நூற்பா-32, 37, 51. 3. பொருளியல்-நூற். 51 (இளம். உரை). பொருளியல்- நூற். 53 (நச். உரை.) - -