பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் வாழ்வில் நேரிடும் பிரிவுகள் - 185

பொருட்பிணிப் பிரிவு: பொருள் காரணமாகப் பிரியும் பிரிவு: பொருட்பிணிப் பிரிவாகும். இது பொருள்வயிற் பிரிவு என்றும் வழங்கப்பெறும், பொருள் இல்லாக் குறையால், பொருள் திரட்ட வேண்டும் என்ற நோக்கத்தால், தலைவன் பிரிகின்றான் என்று கருதவேண்டியதில்லை. தன் பெற்றோர் ஈட்டிய பொருளும் குடிவழியாகப் பெற்ற செல்வமும் ஏராளமாக அவனிடம் இருந்தாலும், அவற்தைத் துய்ப்பது ஆண்டன்மைக்கு இழுக்காகும் என்று கருதியும் தனது முயற்சியால் ஈட்டிய பொருளைக் கொண்டு வாழ்க்கை நடத்தவேண்டும் என்று எண்ணியும் பிரிவான். அன்றியும், தன் முன்னோர் சேமித்த தாயப் பொருளைக்கொண்டு தேவர் காரியமும் பிதிரர் காரியமும் செய்வித்தால் தேவர்களும் பிதிரர்களும் இன்புறார் என்பது அக்காலத்தினர் கொள்கை. தானே தன் முயற்சியால் பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இச்செயல்களை ஆற்றுவித்தால் தனக்குப் பெருமை ஏற்படுவதுடன் தேவர்கட்கும் பிதிரர்கட்கும் இன்பம் உண்டாகும் என்ற கருத்தால் பொருளீட்டப் பிரிவான். இன்று கூடப் பொதுவாக எல்லாப் பகுதிகளிலும், பெரும்பாலும் செட்டிநாட்டுப் பகுதிகளிலும், பணம் ஈட்டுவதற்காகப் பலர் வெளிநாடு செல்வதைக் காண்கின்றோம். ஏராளமான செல்வத்தில் புரளும் செல்வர்களும் பொருள் தேடலின் நிமித்தம் வெளிநாடு செல்வதைக் காண்கின்றோம். இவர்கள் எல்லோரும எந்த நோக்கத்தின் பொருட்டுப் பொருள் தேடுகின்றனர் என்பதைக் கூறவியலாவிடினும், பொருள் தேடச் செல்லுகின்றனர் என்பது மட்டிலும் தெரிய வருகின்றது.

பரத்தையிற்பிரிவு: பரத்தையிற்பிரிவு என்பது பொதுப் பெண்டிர்மாட்டுப் பிரியும் பிரிவு. இணைவிழைச்சு (கலவி) காரணமாகத் தலைவன் அவர்களை நாடிச் சென்றான் என்று எண்ண வேண்டியதில்லை. தலைமகளை விட்டு அப்பொதுப் பெண்டிர்களின் ஆடல் காண்பதற்காகவும் பிரிவான் என்று கருதுதல் வேண்டும். இக்காலத்தில் எத்தனையோ இசை நிகழ்ச்சிகட்கும் நாட்டிய நிகழ்ச்சிகட்கும் பலர் செல்வதைக் காண்கின்றோம். இவர்கள் யாவரும் எந்நோக்கத்திற்காக அவ்விடங்கட்குச் செல்லுகின்றனர் என்பதை நாம் அறிவோம். சிலர் அவற்றைக் கண்டும் கேட்டும் சுவைப்பதற்காகச் செல்லுகின்றனர்; சிலர் பெருமைக்காகச் செல்லுகின்றனர். இவ்வாறு செல்லுங்கால் சிலர் தலைவியை விட்டுச்செல்லுகின்றனர்; சிலர் தம்முடன் கூட்டிச் செல்லுகின்றனர். தலைமகளை விட்டுச் செல்லும்போது திகழ்ச்சிகளின்பால் ஊன்றிநிற்கும் தம் உணர்சசி தலைமகள்மாட்டு நிற்கும் தம் உணர்ச்சியை மறைக்கும். ஏனெனில், இரண்டு உணர்ச்சிகள் ஒருங்கே இருப்பது இயற்கைக்கு முரணானது. இதனால் தம் உணர்ச்சி முழுவதும்