பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xx; காலத்திற்கேற்ற நூல்களை வெளியிட்டுத் தமிழ் காட்டில் சிறந்த முறையில் தமிழ்ப்பணியாற்றி வரும் பழனியப்ப சகோதரர்கள் இந்தப் பெரிய நூலையும் மனமுவந்து ஏற்று வெளியிட்டமைக்கு அவர்கட்கும், நூலைச் செவ்விய முறையில் அச்சிட்டுக் கற்போர் கரங்களில் கவினுடன் தவழச் செய்த ஏஷியன் அச்சகத்தாருக்கும் என் மனமுவந்த நன்றி என்றும் உரியது. அறிவாலும் ஆற்றலாலும் ஒழுக்கத்தாலும் உயர்ந்த சீலத்தாலும் இத்தனைக்கும் மேலாகச் செயலாற்றும் திறனாலும் என் உள்ளத்தைக் கவர்ந்தவர்கள் - தமிழ் கூறு உலகிற்கு அறிமுகப்பட்டவர்கள் - உயர்திரு. எஸ். கோவிந்தராஜுலு நாயுடு அவர்கள். பல்லாண்டுகளாகச் சென்னைச் சட்டக் கல்லுரரியில் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றித் தமிழ்நாடு, ஆங்திரம், கேரளம் ஆகிய மூன்றிலும் உள்ள பல்லாயிரக் கணக்கான மாணாக்கர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்கள். இந்தியன் பீனல் கோட் என்ற சட்டத்தை இலக்கியம் போல் சுவையாகக் கற்பித்துப் பலரை உயர்ந்த சட்ட நிபுணர்களாக்கியவர்கள். மூன்றாண்டுகள் தமிழ்நாட்டுக் (அப் பொழுது சென்னை, ஆந்திரம், கேரளம் கர்நாடகம், அடங்கிய பகுதி) கல்வித்துறை இயக்குநராகப் பணியாற்றித் தம் சிலத்தாலும் உயர்ந்த பண்பாட்டாலும் பல்லாயிரம் ஆசிரியர்களின் உள்ளங் களைக் கவர்ந்தவர்கள். பல்லாண்டுகள் சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவின் உறுப்பினராகவும், இடையிடையே துணை வேந்தராகவும் இருந்து பணியாற்றி, அப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் சர். ஆ. இலக்குமணசாமி முதலியார் அவர்கட்கு உறுதுணையாக நின்று பெரும்புகழ் பெற்றவர்கள். அன்றியும், சென்னைப் பல்கலைக் கழகத் தெலுங்குப் பாடத்திட்ட ஆய்வுக் குழுவிலும், கீழை நாட்டு மொழிகளின் பாடத்திட்ட ஆய்வுக் குழுவிலும் உறுப்பினராகவும் தலைவராகவும் ஏறக்குறைய முப்பதாண்டுகளாகப் பணியாற்றி, மக்களுக்குக் கண்போல் விளங்கும் மொழிகளின் தரத்தை உயர்த்தி மொழித் துறையை வளமாக்கி வருபவர்கள். கடந்த பல பாண்டுகளாகத் தென்மொழி புத்தகப் பொறுப்பாட்சிக் குழுவிற்கு' த் (Southern Languages Book Trust) தலைவராக இருந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் பொது மக்களுக்கெனப் பல நூல்கள் வெளிவரக் காரணமாக இருந்து வருபவர்கள். கடந்த ஒன்பதாண்டுகளாகத் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்துகொண்டு அதன் வளர்ச்சியிலும் பெருமையிலும் அதிகக் கவனம் செலுத்திக்