பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£88 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை எல்லா விதத் தொழில்களிலும் ஈடுபடுகின்றனர். எனவே, மக்கள் தொழில் செய்யும் பொழுது, செய்யும் தொழில் காரணமாக அந் தத்தச் சாதியினராகின்றனர் என்று கோடலே பொருந்தும்; பண்டும் இம்முறையே வழக்கிலிருந்திருத்தல் வேண்டும். நான் ஆசிரியத் தொழிலிலிருப்பதால், யான் பார்ப்பனன். என் மைந்தர்களுள் ஒருவன் வாணிகம் செய்தால் அவன் வணிகன்: இன்னொருவன் உழவுத் தொழிலில் ஈடுபட்டால் அவன் வேளாளன். ஓதல், பகை, து து என்று பிரிவிற்கு கிமித்தம் கூறும் தொல்காப்பியர், அவற்றுள், ஒதலும் துரிதும் உயர்ந்தோர் மேன." என்று கூறும் பொழுது உயர்ந்தோர்’ என்று பொதுப்படையாக இருப்பது சிந்தித்தற்குரியது. பிறப்பினால் உயர்வ உண்டு என்ற கொள்கையில் அழுத்திய உரையாசிரியர்கள் உயர்ந்தோர் என்ப தற்குத் தத்தமக்குத் தோன்றியவாறு பொருளுரைத்தனர். இளம் பூரணர், கால்கை வருணத்தினும் உயர்ந்த அந்தணர் அரசர்" என்றும் கச்சினார்க்கினியர், அந்தணர் முதலிய மூவர் என்றும் பொருளுரைத்தனர். ஒவ்வொருவரும் தத்தம் மனப்பான்மைக் கேற்றவாறு ஒவ்வோர் அளவுகோல் கொண்டனர். இங்ங்னம் உரையாசிரியர்கள் சாதிப் பிரிவையோட்டி உயர்ந்தோர் என்று கூறி. யிருப்பது இக்காலத்திற்குச் சிறிதும் ஏற்காது; எக்காலத்திற்கும் ஏற்காது; ஏற்கவும் முடியாது. எனவே, உயர்ந்தோர் என்பத்ற்கு அறிவினாலும் ஒழுக்கத்தினாலும் சிலத்தினாலும் பண்பாட்டினாலும் உயர்க்தோர்’ என்று கோடலே பொருந்தும், அஃதே அறிவுடைமையு மாகும். மேற்குறிப்பிட்ட நூற்பாவினை அடுத்து வரும் நூற்பாக் களிலும் பிரிவுகளைப்பற்றிப் பொதுப்படையாகவே கூறியிருப்பது இதனை வலியுறச் செய்யும். பாலைத்தினையின் உயர்வு தலைவன் பிரிந்து செல்லும் பொழுது, இத்தனை நாள்களுக்குள் வந்துவிடுவேன். இத்தனை மாதங்களுக்குள் வந்துவிடுவேன், இத்தனை இருதுக்குள் வந்து விடுவேன்' என்று கூறிச் செல்வதாகப் புலவர்கள் பாடல்கள் புனைவது மரபு. இக்குறித்த பருவத்தில் தலைவன் வாராத பொழுது, தலைவி மனங்கவல்வதாகப் பாடல்களில் கூறப் பெறும் பாலைத்தினைப் பாடல்களில் இலக்கியச் சுவை கணிக் திருக்கும். காரணம், இன்பத்தை அறிவு கிலையில் வைத்து 9. ஆக்திரகாட்டில் இன்றும் ஆசிரியத் தொழிலிலுள்ளவரை அய்யவாரு (அய்யர்) என்று வழங்குவதை அறிக. 10. அகத்திணை - நூற்பா 28.