பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. உள்ளுறை உவமம் ஒத்திருக்க வேண்டிய பண்புகள் : காதலை ஒரு தெய்வ உணர்ச்சியாகப் போற்றி வளர்த்த தமிழர்கள் அக்காதல் உணர்ச்சி களுக்குப் பாத்திரங்களான தலைவன் தலைவியர் ஊழின் வலியால் கூட்டப்பெறுவர் என்று கம்பிக்கை கொண்டிருக்தனர். இந்தத் தலைவன் தலைவியர் பத்து வகைப் பண்புகளில் ஒத்திருக்க வேண்டும் என்று தொல்காப்பியர் கூறுவர். 'பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காம வாயில் கிதையே அருளே உணச்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே. என்பது அவர் கூறும் நூற்பா ஒத்த பிறப்பும், ஒத்த ஒழுக்கமும், ஒத்த ஆண்மையும், ஒத்த வயதும், ஒத்த உருவும், ஒத்த அன்பும், ஒத்த நிறையும், ஒத்த அருளும், ஒத்த அறிவும், ஒத்த செல்வமும் என்ற பத்துப் பண்புகளிலும் ஒத்தவர்களாக இருக்க வேண்டுமென் பது அவர் கொண்ட குறிக்கோள். இங்குப் பிறப்பு என்பது, குலம் பற்றி வரும் பண்பாடு, குடிமை என்பது, ஒழுக்கம் பற்றி வருவது : ஒழுக்க முடைமை குடிமை (குறள்-133) எனற வள்ளுவர் வாக்கை ஈண்டு எண்ணிப் பார்க்க வேணடும். ஆண்மையாவது, ஆண்மைத் தன்மை ; அஃதாவது, ஆள்வினையுடைமையையும் வலி பெயரா மையுமாகும். ஆண்டு என்பது, ஒருவரைவிட ஒருவர் முதியவராக இல்லாமல் ஒத்த பருவத்தினராக இருத்தல் அது குழந்தைப் பருவங் கழித்து ஆண்மை பிறக்கும் பதினாறு பிராயத்தானும், பெண்மை பிறக்கும் பன்னிரண்டு பிராயத்தாளும் ஆதல் உரு என்பது, வனப்பு : இளமைப் பருவத்தில் காணப்பெறும் ஒருவித வினுமினுப்பான உயிர்த்தன்மை (grace), கிறுத்த காம வாயில் என்பது, நிலை கிறுத்தப்பட்ட புணர்ச்சிக்கு வாயில் : அஃதாவது ஒருவர்மாட்டு ஒருவர்க்கு நிகழும் அன்பு, நிறை என்பது, அடக்கம் : மறை பிறர் அறியாது கெஞ்சினை கிறுத்தல். அருள் என்பது, பிறர் வருத்தத்திற்குப் பரியும் கருணை எல்லா உயிர்க்கும் இடுக் கண் செய்யாத அருளுடையராயிருத்தல். உணர்வு என்பது, அறிவுடைமை : உலகியலால் செய்யத் தகுவது அறிதல். திரு. 1. மெய்ப் - நூற். 25 (இளம்.)