பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகமும் புறமும் 239, அருள் கொள்ளுகின்றான். பசலையொழுக்கத் தலைவனும் தான் விட்டு ங்ேகிய தலைவியின்பால் அருள் காட்டுகின்றான். எனவே, வான்வெளியின் பயிற்சி கலப்பு என்னும் வாகையுணர்ச்சியாய் துணுகிக் கேட்கும் செயலால் அருள் என்னும் பாலையுணர்ச்சி யாப்ப் பின்னும் நுணுகியமைதிலைக் கண்டு கொள்க. காஞ்சி x பெருக்தினை : காஞ்சி என்பது கிலையாமையைக் கூறுவது. அறம் பொருள் இன்பங்களின் கிலையின்மை உலகியலை கோக்க நற்பொருள் அன்றென விலக்கப்படுகின்றது. ஆங்ங்ணமே ஏறிய மடல் திறம், இளமை தீர் திறம் தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம், மிக்க காமத்து மிடல் ஆகிய கான்கும் தியகாமம் என விலக்கப்பெறுகின்றன. அறம் பொருள் இன்பம் ஆகியவையற்றி பன்றி நிலையாமையென்ப தொன்றில்லை. அங்ங்ணமே, பெருக் தினையும் ஐந்தினைக்குரிய சிலத்தின்கண் கிகழ்தலன்றித் தனக் கென ஒரு கிலத்தைப் பெற்றிருக்கவில்லை. காஞ்சித்தினையில் அரசனைப் புலவர்கள் வலிந்து கிலையாமை பறிவுரைத்துத் தம் வழிப்படுத்துகின்றனர். அங்ஙனமே, பெருக்தினையிலும் காதலர்கள் தம்முள் ஒருவரையொருவர் வலிந்து வழிப்படுத்திக்கொள்ளுகின்ற னர். இவ்வாற்றான் இவையிரண்டன் உறவு முறை அறியப்பெறும். பாடாண் x கைக்கினை : ஒரு கிலத்திற்கு உரித்தன்றி ஒரு தலைக் காலமாகி வருவது கைக்கிளையாகிய அகத் திணை. அங்ங்னமே, பாடாண் தினையும் ஒருபாங்கு உரித்தன்றி ஒருவனை யொருவன் யாதானுமோர் பயன் கருதியவழி மொழிந்து நிற்பது இயற்பெயர் கூறப்படுதலும் கழிபேசிக்கமல்லாத செக்திறத்தால் வருவதும்இரண்டற்கும் ஒக்கும். “ஒரு தலைவன் பரவலும் புகழ்ச்சி யும் வேண்ட ஒரு புலவன் வீடுபேறு முதலிய பரிசில் வேண்டுதலின், அவை தம்மின் வேறாகிய ஒருதலைத் காமமாகிய கைக்கிளையோ டொத்தலின் பாடாண்தினை கைக்கினைக்குப் புறனாயிற்று: என்று கூறுவர் கச்சினார்க்கினியர். காஞ்சித்திணையும் பாடாண்தினையும் அரசனுடைய அரசியல் ஒழுக்கங்கள் ஆகா: அவை அவனுடைய அற ஒழுக்கங்களாகும். இந்த அற ஒழுக்கங்களை அவன் எஞ்ஞான்றும் உடையவனாயிருத் தல் வேண்டுமாதலின், இவை வெட்சி முதல் வாகை ஈறாக நிகழும் ஐம்பெரும் புற ஒழுக்கங்கட்கும் பொதுவாய் அவற்றுள் அடங்கும். அங்ங்னமே, கைக்கிளையும் பெருந்தினையும் நடுவனைத்தினைக் காமத்தையே ஒருவாறு குறிக்கொண்டு நிகழ்கின்றனவாகலின், இவையும் அவ்வைம்பெரும் அக ஒழுக்கங்கட்கும் பொதுவாப் அவற். றுள் அடங்கும். இதனாலும், காஞ்சியும் பாடானும் முறையே பெருக்திணை, கைக்கிளைகளின் புறனாயின எனக் கொள்ளலாம். 14. புறத்திணை - நூற். 25 இன் உரை (கச்சி.)