பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் கெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும் தமிழ்வரம் பறுத்த தண்புனல் கன்னாட்டு: என்று குறிக்கின்றார் என்பதை நாம் ஈண்டு கினைவில் இருத்துதல் வேண்டும். - நூல் தோன்றக் காரணம் : தமிழக வரலாற்று ஆசிரியர்கள் மூன்று கடல் கோள்களைக் குறித்துள்ளனர். அவற்றுள் முதலாவது: கி. மு. 2387-ஆம் ஆண்டிலும், இரண்டாவது கி. மு. 504-ஆம் ஆண்டிலும், மூன்றாவது கி. மு. 306-ஆம் ஆண்டிலும் நிகழ்ந்ததாக அவர்கள் கூறுவர். இம்மூன்றனுள் முதலாவது கடல்கோளே குமரி காட்டின் பெரும்பகுதியை விழுங்கியது; இதுவே தொல்காப்பிய னார் காலத்தில் நிகழ்ந்தது. இதனால் தமிழகத்தின் தென் பாலமைந்த பெருகிலப்பரப்பும், தமிழ் நூல்கள் பலவும் அழிந்து பட்டன. கடல்கோளுக்குப் பின்னர் வாழ்ந்த தமிழ்மக்கள் முத்தமிழ் நூற்பரப்பின் அமைதியை அறியும் ஆற்றலற்றவராயிருந்தனர்; வடநாட்டினரால் பேசப்பெறும் ஆரிய மொழியும் தமிழ்நாட்டில் சிறிது சிறிதாகக் கால்கொண்டு ஊன்றி வளர்வதாயிற்று. தமிழ் மொழிக்கும் ஆரிய மொழிக்குமுள்ள இயல்புகளுள் ஒன்று: மற்றொன்றனோடு உறழ்ந்து விர வும் வகையில் வடவரும் தென்னகத்தாரும் அளவளாவி உறவுகொண்டனர். முத்தமிழின் ஒன்றன் இயல்புகள் பிறிதொன்றன் இயல்புகளுடன் இயைத்து உரைக்கப்பெற்றன. தமிழ் மொழியின் திறத்தையும் அதன் பொருட்பாகுபாட்டையும் பகுத்துணரும் ஆற்றல் பொதுமக்களிடம் வளராதிருந்தது. இங்கிலையில் தமிழ் மொழியின் சிறப்பினை எல்லார்க்கும் விளங்க எடுத்துரைக்கும் இயற்றமிழ் இலக்கண நூலொன்று தோன்றுவது இன்றியமையாததாக இருந்தது. இச் சூழ்நிலையில் தொல்காப்பியர் மொழிப்பணியே தம் வாழ்க்கைப் பணி என்று கருதி, அதில் இறங்கினார். நாம் இன்று தமிழ்மொழி யின் கண் எனப் போற்றும் தொல்காப்பியத்தை ஆக்கித் தந்தார். எது தமிழ் மொழி ? : தமிழ் பேசப்பெறும் காட்டில் தமிழ் மொழிக்கு வழங்கும் இலக்கணம் தொல்காப்பியம் என்பதை மேலே கண்டோம். தமிழ்மொழி என்பது என்ன, அதன் உருவம் பாது என்பவற்றை நாம் அறியவேண்டும். இலக்கணம் என்பது இலக்கியத்தின் இயல்பைக் கூறும் ஒரு சட்டம் போல்வது; நூல் வடிவில் இருப்பதுதான் இலக்கியம்: மக்கள் பேசுவது இலக்கியம் ஆகாது’ என்று கருதுதல் தவறு. ஒரு மொழிக்கு இலக்கணம் கூறப் 3. சிலப் வேனிற்காதை-அடி 1-2