பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. இருதிணைக்கும் பொதுவான மெய்ப்பாடுகள் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் முதற்கண் அகத் திற்கும் புறத்திற்கும் பொதுவாய்ச் சிறந்து கிற்கும் மெய்ப்பாடு களைக் கூறுகின்றார். சுவையெனினும் மெய்ப்பாடெனினும் ஒக்கும். காவாகிய பொறியினால் அறியப்பெறும் இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, உறைப்பு என்கின்ற அறு வகைச் சுவைகள் போன்று கண்ணினும் செவியினும் அறியப் பெறும் சுவைகள் எட்டு. அவை: க.கை, அழுகை, இளிவால், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன. இந்த எட்டு மெய்ப்பாடுகளையும், நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்(று) அப்பா லெட்டே மெய்ப்பா டென்ப, ! என்ற நூற்பாவால் குறிப்பிடுவர் ஆசிரியர் தொல்காப்பியர். இந்த எட்டு மெய்ப்பாடுகளும் அவை தோன்றும் நிலைக்களன்களுக் கேற்ப கங்கான்காய்ப் பகுதிப்பட்டு நடக்கும் என்பர் ஆசிரியர். இவற் றுள் நகை, அழுகை, இளிவரல், மருட்கை என நான்கு மெய்ப்பாடு களின் விரிவாகிய நானான்கு பதினாறும் தன்கண் தோன்றுதல், பிறர்கண் தோன்றுதல் என இருபகுதிப்பட்டு முப்பத்திரண்டாக கடக்கும் என்றும்; ஏனைய அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற நான்கு மெய்ப்பாடுகளும் கானான்கு பதினாறு பகுதிப்படு மேனும், முன்னவை போல ஒன்றிரண்டாகி முப்பத்திரண்டாகாது பதினாறோயாம் எனவும் உரையாசிரியர்கள் கூறுவர்; இந்த எட்டு ப்ெப்ப்பாடுகளையும் ஒவ்வொன்றாகச் சற்று விரிவாக எடுத்து காட்டுகளுடன் ஆராய்வோம். 1. நகை நகை என்பது, சிரிப்பு: அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலும் என மூன்று வகைப்படும். நகை தோன்றும் இடங்கள் மிகப் பலவாகும் என்பது உடனிவை 1. மெய்ப் - நூற். 3 (இளம்.)