பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருதிணைக்கும் பொதுவான மெய்ப்பாடுகள் 259 என்ற புறப்பாட்டடிகளில் (புறம். 16சி) சுவைத்தொ றமூஉம்’ என்றது குழந்தை பால் பெறா வறுமை தனக்கு எய்தலால் அடைக்த அழுகை காண்க. (ஆ) பிறர்கண் தோன்றிய வறுமை பற்றிய அழுகை : மேற்கூறிய குழந்தையின் கிலையினை நோக்இ பழும். தாயிடத்தே பாலின்மையாய வறுமை கண்டு தங்தை அவலிப்பது. மனையோள் எவ்வம் நோக்கி கினை இ சிற்படர்க் திகினே கற்போர்க் குமண! என்ற அடிகளில் மனைவியின் வறுமை நோக்கிக் கணவன் அவலித்தது காண்க. 3. இளிவரல் இளிவால் என்பது, இழிபு : அஃதாவது, மானக்குறைவு. இந்த மெய்ப்பாடு விரிந்து நடப்பதை ஆசிரியர், மூப்பே பிணியே வருத்தம் மேன்மையோடு யாப்புற வந்த இளிவால் கான்கே.சி என்றதுசற்பாவால்கூறுவர். இங்கு முப்பு என்பது, முதுமை காரண மாகத் தோன்றும் தளர்ச்சி. பிணி என்பது, கோப். வருத்தம் என்பது, இடுக்கண், அஃதாவது, அல்லல். வருத்தம் என்பதை, முயற்சி என்பர் பேராசிரியர் (அஃதாவது, பயன் விளையாத வீண் முயற்சி). மென்மை என்பது, எளிமை : அஃதாவது ஆற்றலும் பொருளும் இன்றி எளியராம் கிலைமை, இவை கான்கும் தன் மாட்டுத் தோன்றினும் நிகழும். (க) மூப்புப்பற்றி வரும் இளிவரல் (அ) தன்கண் தோன்றும் மூப்புப் பற்றி வரும் இளிவரல் : ஒரு புலவர் தன் முதுமையை கினைக்து தன்னை இகழ்ந்து கொள்ளுகின்றார். தொடித்தலை விழுத்தண் டூன்றி கடுக்குற்(று) இருமிடை மிடைந்த சிலசொற் பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே." 5. மெய்ப் - நூற். 6 (இளம்).