பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை கெண்டன : அரி வேங்கை புலி முதலாகவுள்ள கொடிய விலங்கு கள். கள்வரென்பார் : சோர்வு பார்த்து வஞ்சித்துக் கொடுக் தொழில் புரிவோர். இறை எனப்படுவார் : தக் தை, ஆசிரியன், அரசன், வழிபடு தெய்வம் என இவ்வுரிமை முறையிற்பணி கொண்டு தம்மை ஆள்வோர். அஞ்சத்தக்கனவாகிய இவற்றைக் கண்ட கிலையில் உள்ளம் கடுக்கமுற்று அஞ்சுதல் இயல்பு. இங்கனம் கடுங்காது பிணங்கி சிற்பாரது மனத்தில் அச்சம் தோன்றுவதில்லை என்பார், சபிணங்கல் சாலா அச்சம் என்றார். இலை தன்கண் தோன்றலும் பிறன்கண் தோன்றலும் என்னும் தடுமாற்றமின்றிப் பிறிது பொருள் பற்றியே வரும். (க) அணங்கு பற்றி வரும் அச்சம் தமிழ்காட்டுக் குறிஞ்சி மகளிர் வீரத்தினைப் பற்றிக் கூறு மிடத்து, அவருட் சூல்கொண்ட மகளொருத்தி தானும், அச்சம் விளைவித்துக் கருவினைச் சிதைக்க வல்ல பொருள்கள் அச்சுறுத்தியவிடத்தும் அஞ்சாது மீள்வது பற்றிக் கூறும். பானை தாக்கிலும் அரவுமேற் செலினும் கீள்கிற விசும்பின் வல்லேறு சினைப்பினும் சூர்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை என்னும் பெரும்பாணாற்றுப்படை அடிகளில் (அடி 134 - 36) குறிக்கப்பெறும் இடி போலும் தெய்வச் செயல் பற்றி ஒருவர் மாட்டு அச்சம் நிகழ்வது போல்வது இது. (உ) விலங்கு பற்றி வரும் அச்சம் இதற்கும் மேற்கூறிய செய்யுட்பகுதியையே மேற்கோளாகக் கொள்ளலாம். யானை, அாவு முதலியன விலங்கு என்ற இப்பகுதியில் அடங்குவதை அறிக. (க) கள்வர்பற்றி வரும் அச்சம் ஒரு தலைவி தலைவனை நோக்கி, நீ கண்ணை மூடித் திறப் பதற்குள் மறைந்துவிடுங் கள்வன். என்னை விட்டு நீங்குதி" என்கின்றாள். ஒரூஉ பெங்கூந்தல் கொள்ளல்யாம் கின்னை வெரூஉதுங் கானுங் கடை. என்ற கலிப்பாட்டடிகளில் (கலி - 87) கள்வன் போலும் தலை