பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருதினைக்கும் பொதுவான மெய்ப்பாடுகள் 267 வனைக் கண்டு தலைவி அஞ்சி, இமைப்பின் இதழ்மறை பாங்கே கெடுதி” என்று கூறுவதைக் காண்க. (ச) இறைபற்றி வரும் அச்சம் சிற்றரசர்கள் தம் பேரரசனை திமிர்ந்து நோக்காது அஞ்சிக் குனிக் து சிற்பர். எருத்துமே னோக்குறின் வாழிலே மென்னுங் கருத்திற்கை கூப்பிப் பழகி - யெருத்திறைஞ்சிக் கால்வண்ண மல்லாற் கடுமான்றேர்க் கோதையை டிேல் வண்ணங் கண்டறியா வேந்து. என்ற இலக்கண விளக்கப் பழம் பாடலில் இறை பொருளாக அச்சம் பிறந்தமை அறிக. இனி, மகளிர் ஊடலால் தலைவர்க்கு வரும் அச்சம் முதலியனவும் இவற்றுள் அடங்கும். எடுத்துக்காட்டு வந்துழிக் காண்க. 6. பெருமிதம் பெருமிதம் என்பது, வீரம். அஃது ஏனைப் பெருமை களோடும் ஒப்ப கில்லாது பேரெல்லையாக நிற்பதால் பெருமிதம் எனப்பட்டது என்பர் பேராசிரியர். எனவே, அறிவு, ஆண்மை. பொருள் முதலிய சீறப்புகளால் மக்கள் எல்லாரோடும் ஒப்பு கில்லாது உயர்ந்து கிற்றல் பெருமிதம் ஆகும் எனக் கொள்ளுதல் பொருந்தும். பெருமிதம் என்பது, தன்னைப் பெரியனாக மதித்தல் என்பர் இளம்பூரணர். பெருமிதத்தின் இயல்பு, கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே. என்ற தொல்காப்பிய விதியால் அறியப்படும். இவற்றுள் கல்வி என்பது, தவம் முதலாகிய செயலின் திறம். தறுகண் என்பது, அஞ்சத்தக்கன கண்ட இடத்து அஞ்சாமை : அஃதாவது, உள்ளத்து உறுதியாகிய வீரம். இசைமை என்பது, இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழியொடு செய்யாமையாகிய புகழ்ச்சித் திறம். கொடை என்பது, உயிரும் உடம்பும் உறுப்பும் முதலிய எல்லாப் பொருளும் கொடுத்தலாகிய வன்மைத்திறம், இவை தான்கும் ஒருவர்பால் அமைந்த கிலையில் அவரிடத்தே 8. மெய் . நூற். 9 (இளம்)