பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை பெருமிதம் என்னும் மெய்ப்பாடு தோன்றுதல் இயல்பு. இது தன்கண் தோன்றிய பொருள்பற்றியே வரும் என்பர் பேராசிரியர். (க) கல்வி பற்றி வரும் பெருமிதம் காளமேகப் புலவர் தன் ஆசுகவி பாடுக்திறத்தைச் செப்பி அதிமதுர கவிக்கு ஏடெழுதி அனுப்புகின்றார் : சதுரதைங்து நாழிகையில் ஆறுகா ழிகைதனில் சொற்சங் த மாலை சொல்லத் துகளிலா அக்தாதி எழுகா ழி கைதனில் தொகைபட விரித்து ரைக்கப் பாதஞ்செய் மடல்கோவை பத்துகா தீகைதனில் பரணியொரு நாள் முழுதுமே பாரகா வியமெலாம் ஒரிரு தினத்திலே பகரக் கொடிகட் டினேன் : என்ற பாடற்பகுதியில் காளமேகம் தன்னுடைய கவி பாடும். பெருமிதத்தை வெளிப்படுத்துவதைக் காண்க. சீட்டுக்கவிகளின் முற்பகுதியில் இத்தகைய பெருமிதத்தைக் காணலாம். (உ) தறுகண்பற்றி வரும் பெருமிதம் மிகக் கடுமையாகப் போர் புரியும் அது மன் முன்னே அகம்பன் என்ற அரக்கன் அஞ்சாது பெருமிதத்துடன் எதிர்த்து. வருகின்றான். இன்றிவன் தன்னை விண்ணாடு ஏற்றிவாள் இலங்கை வேங்தை வென்றிய னாக்கி மற்றை மனிதரை வெறிய ராக்கி கின்றுளர் கெடிய துன்பம் அமரர் பால் நிறுப்பன் என்னா என்ற கம்பராமாயணப் பாடற்பகுதியில் (பிரம்மாத்திரம் - 129). அகம்பன் தன் தறுகண் பற்றிப் பெருமிதம் கூறுதல் காண்க. - (க) இசைமை பற்றிய பெருமிதம் துச்சாதனன் திரெளபதியைத் துகில் உரிகையில் சினம். கொண்ட வீமன் தருமனிடம் தம் புகழ்பற்றிப் பேசுகின்றான்.